»   »  விஜய் ஆண்டனியின் அடுத்த அவதாரம் இதுதானாம்!

விஜய் ஆண்டனியின் அடுத்த அவதாரம் இதுதானாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாகக் களமிறங்கியவர் விஜய் ஆண்டனி. அவரின் முதல் படம் 'நான்' ஹிட்டானதால், இசையமைப்பதைக் குறைத்துவிட்டு தொடர்ந்து நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் ஹீரோவாக நடித்த 'பிச்சைக்காரன்' படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்றதால் தன் அடுத்த படமான 'அண்ணாதுரை' படத்தைத் தெலுங்கிலும் உருவாக்கி வருகிறார்.

Vijay Antony's next incarnation is this

இந்நிலையில், இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி இசையமைப்பாளர், ஹீரோ மட்டுமின்றி எடிட்டராகவும் பணியாற்றவுள்ளார். அவரது எடிட்டிங் ரசிகர்களுக்குப் பிடித்தால் இனி அவரின் படங்களில் அவரே தொடர்ந்து எடிட்டராக செயல்படுவார் என்பது மட்டும் நிச்சயம்.

விஜய் ஆண்டனி ஹீரோவானதற்குப் பிறகு ஜி.வி பிரகாஷ் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இந்நிலையில், இசையமைப்பாளர் டி.இமானைப் படத்தில் நடிக்கவைப்பதாக இயக்குநர் சுசீந்திரன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vijay Antony is a music composer who took hero avatar. He has tried his hands in editing for the moive 'Annadurai'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil