»   »  லைகா உதவியுடன் தெலுங்கில் வெளியாகிறது... விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்'

லைகா உதவியுடன் தெலுங்கில் வெளியாகிறது... விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த வாரம் வெளியான சசியின் பிச்சைக்காரன் திரைப்படம் அடுத்ததாக தெலுங்கில் வெளியாகவிருக்கிறது.

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம்,தமிழ் சினிமாவின் வழக்கமான செண்டிமெண்ட்களை உடைத்தெறிந்து வெற்றி கண்டிருக்கிறது.


சசியின் இயக்கம், விஜய் ஆண்டனி நடிப்பு மற்றும் திரைக்கதை போன்றவை நன்றாக இருந்ததால் தமிழ் ரசிகர்கள் பிச்சைக்காரன் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.


தமிழ்நாடு முழுவதும்

தமிழ்நாடு முழுவதும்

பிச்சைக்காரன் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் தமிழ்நாடு முழுவதும் இப்படத்தின் காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கின்றனர்.நேற்று இப்படம் மலையாள மொழியில் வெளியானது.


லைகாவுடன் இணைந்து

தொடர்ந்து தெலுங்கிலும் இப்படம் வெளியாகவிருக்கிறது. இதுகுறித்து விஜய் ஆண்டனி "நண்பர்களே! லைகா நிறுவனம் என்னுடன் இணைந்து பிச்சைக்காரன் படத்தை தெலுங்கு மொழியில் வெளியிடுகிறது" என்று கூறியிருக்கிறார்.


சொந்தமாக

சொந்தமாக

தமிழில் தன்னுடைய 'விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்' மூலமாக இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து, வெளியிட்டிருந்தார்.


விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி

முதல் 5 நாட்களில் இப்படம் சுமார் 7.40 கோடிகள் வரை தமிழ்நாட்டில் வசூலித்து இருக்கிறது. விஜய் ஆண்டனியின் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த முதல் படம், என்ற பெருமை தற்போது பிச்சைக்காரனுக்கு கிடைத்திருக்கிறது.


English summary
Vijay Antony Tweeted "Hi friends,LycaProductions will be releasing #PICHAIKKARAN in telugu in association with Vijay Antony Film Corporation soon".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil