Don't Miss!
- News
இபிஎஸ் பொறுப்பு என்ன? பதவியில் இல்லாமல் வேட்பாளரை எப்படி முன்மொழியலாம்.. ஓபிஎஸ் தரப்பு கேள்வி!
- Finance
PF கணக்கு வைத்துள்ளீர்களா..? பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்பு.. வரி சலுகை..!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கை முழுவதும் பழிவாங்க துடிப்பார்களாம்... இவங்கள எப்பவும் நம்பாதீங்க...!
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Sports
பார்டர் கவாஸ்கர் கோப்பை - அதிக போட்டிகளில் வென்றது யார்? அதிக ரன்கள் அடித்தது யார்.. முழு விவரம்
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
எதிர்பார்க்குற அமைதியான வாழ்க்கை கிடைக்கலனா திருப்பி அடி: மிரட்டும் விஜய் ஆண்டனியின் ரத்தம் டீசர்
சென்னை: விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சிஎஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் மூன்று நாயகிகள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
ரத்தம் டீசரில் இயக்குநர்கள் வெற்றிமாறன், வெங்கட் பிரபு, பா ரஞ்சித் ஆகியோரும் நடித்துள்ளது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அமுதவாணனுக்கு என்ன ஆச்சு..ரத்தம், ரத்தம்னு தூக்கத்தில் உளறல், ..நடுராத்திரியில் அலறி ஓடிய மணிகண்டன்

விஜய் ஆண்டனியின் ரத்தம் டீசர்
திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பயணித்து வருகிறார் விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தை இயக்கி ஹீரோவாக நடிக்கும் விஜய் ஆண்டனி, ரத்தம் படத்திலும் நடித்து முடித்துள்ளார். சிஎஸ் அமுதன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன் ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், ரத்தம் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆக்சனில் மிரட்டும் டீசர்
தமிழின் முதல் ஸ்பூஃப் சினிமாவான 'தமிழ்ப் படம்' மூலம் பிரபலமானவர் இயக்குநர் சி.எஸ்.அமுதன். அதனையடுத்து அவர் 'ரெண்டாவது படம்' என்ற டைட்டிலில் ஒரு படம் இயக்கினார். அது இன்னும் வெளியாகாத நிலையில், தமிழ்ப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார். இந்த இரண்டு பாகங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து காமெடி ஜானரில் படங்கள் இயக்கி வந்த சிஎஸ் அமுதன், ரத்தம் படத்தில் ஆக்சன் அவதாரம் எடுத்துள்ளார். மிரட்டலான ஆக்சன் காட்சிகளுடன் உருவாகியுள்ள ரத்தம் டீசர், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அமைதியான குடும்பம் அளவான மகிழ்ச்சி
தமிழ்ல எல்லோரும் விரும்புறதே ஒரு அமைதியான சிம்பிளான வாழ்க்கைய தான் எனத் தொடங்கும் இந்த டீசர், அடுத்தடுத்து ஆக்சனில் பயணிக்கிறது. நமக்கு தேவையான அமைதி கிடைக்கவில்லை என்றால், அதுக்கு இடையூறாக இருப்பதை திருப்பி அடி என்ற மையக்கருவே ரத்தம் படத்தின் கதை எனத் தெரிகிறது. விஜய் ஆண்டனியின் வித்தியாசமான லுக்கும் அதிரடியான ஆக்சன் காட்சிகளும் ரசிகர்களை மிரட்டியுள்ளது. டீசர் மூலம் கவனம் ஈர்த்துள்ள ரத்தம் திரைப்படம், திரையரங்குகளில் சூப்பர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிமாறன், வெங்கட் பிரபு, பா ரஞ்சித்
முக்கியமாக இந்த டீசரில் இயக்குநர்கள் வெற்றிமாறன், வெங்கட் பிரபு, பா ரஞ்சித் ஆகியோரும் நடித்துள்ளனர். கதையின் அவுட் லைனை விவரிக்கும் சிறப்புத் தோற்றத்தில் மூவரும் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளனர். முன்னதாக இந்த டீசரின் மேக்கிங் வீடியோவை, விஜய் ஆண்டனி தனது டிவிட்டரில் ஷேர் செய்திருந்தார். ஒரு மேக்கிங் வீடியோவாக வெளியான இதில், இயக்குநர்கள் வெற்றிமாறன், வெங்கட் பிரபு, பா ரஞ்சித் மூவரும் ஸ்கிரிப்ட் பேப்பர்களுடன் மைக் முன்னால் பேசுவதாக உருவாகி இருந்தது.