»   »  'எமன்' திரைப்படம் மூலம் அரசியலில் கால்பதிக்கும் விஜய் ஆண்டனி!

'எமன்' திரைப்படம் மூலம் அரசியலில் கால்பதிக்கும் விஜய் ஆண்டனி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பயந்துராதீங்க... நிஜமான அரசியலில் அல்ல.. அரசியல் கதையில் அரசியல் வாதியாக நடிக்கிறார் விஜய் ஆன்டனி.

அவர் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் எமன் ஒரு பக்கா அரசியல் கதையாம்.

Vijay Antony turns as politician

'இதுவரை மக்கள் பார்வையில் அரசியல்வாதிகளைப் பற்றி படமெடுத்துக் காட்டினார்கள். ஆனால் எமன் அப்படியல்ல... அரசியல்வாதிகள் பார்வையில் அரசியலைக் காட்டியுள்ளோம். முதல் முறையாக, நம் நாட்டு ஆண் மகன்களின் வீர அடையாளமாக கருதப்படும் முறுக்கு மீசையை வைத்துக்கொண்டு நடித்து இருக்கிறார் விஜய் ஆண்டனி," என்கிறார் படத்தின் இயக்குநர் ஜீவா சங்கர்.

விஜய் ஆன்டனி முதலில் நாயகனாக நடித்த நான் படத்தை இயக்கியவர் ஜீவா சங்கர். விஜய் ஆண்டனிக்கு ஜோடி மியா ஜார்ஜ்.

'லைக்கா புரொடக்ஷன்ஸ்' மற்றும் 'விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பொரேஷன்' இணைந்து தயாரித்திருக்கும் 'எமன்' திரைப்பட விஜய் ஆன்டனியே இசையும் அமைத்திருக்கிறார். மறைந்த கவிஞர் அண்ணாமலை கடைசியாக பாடல் எழுதிய படம் இது. அவருடன் ஏக்நாத்ராஜ், வெற்றிச் செல்வன், சேஷா ஆகியோரும் பாடல்கள் எழுதியுள்ளனர்.

பிரபல நடிகர் தியாகராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார் இந்தப் படத்தில்.

    English summary
    Vijay Antony is appearing as a politician in his next movie Yeman.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil