Box Office: விஜய் ஆண்டனி சேஃப்.. கவின் ரொம்ப பாவம்.. சக்தித் திருமகன் vs கிஸ் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்!

சென்னை: கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான படங்களில் கவினின் கிஸ் மற்றும் விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் தான் கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை பார்த்துள்ளது. தண்டகாரண்யம் 60 லட்சம் வசூலை கூட 3 நாட்கள் முடிவில் தாண்டவில்லை என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. படையாண்ட மாவீரா படத்தின் வசூல் நிலைமை எல்லாம் படுமோசம்.

செப்டம்பர் மாதம் தமிழில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாக மதராஸி படம் தொடர்கிறது. 100 கோடிக்கும் அதிகமான வசூலை அந்த படம் ஈட்டினாலும், பட்ஜெட் அதைவிட அதிகம் என்பதால் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை அந்த படமும் பெறவில்லை என்கின்றனர்.

Vijay antony s Sakthi Thirumagan beats Kavin s Kiss at the first week Box Office clash
Photo Credit:

குறைந்த பட்ஜெட்டில் வெளியான படங்கள் எல்லாம் தொடர்ந்து கும்பல் கும்பலாக வந்து அப்படியே கும்பல் கும்பலாக தியேட்டர்களை விட்டு வெளியேற்றப்படுவது தமிழ் சினிமாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருவதாக பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

கவினுக்கு அடுத்த தோல்வி: சிவகார்த்திகேயனை தொடர்ந்து நடிகர் கவின் விஜய் டிவியில் இருந்து வந்து வெள்ளித்திரையில் ஷைன் ஆவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவரும் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து சூப்பராகவே நடித்து வருகிறார். டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு கவின் பெரிய பிளாக்பஸ்டர் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்டார் படம் சுமாராக ஓடியது. ப்ளடி பெக்கர் தோல்வியை தழுவ மீண்டும் ஒரு தோல்விப் படமாக கிஸ் மாறியுள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கிஸ் 3 நாள் வசூல்: சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின், ப்ரீத்தி அஸ்ரானி, தேவயானி, கெளசல்யா, விடிவி கணேஷ், ஆர்ஜே விஜய், ராவ் ரமேஷ், பிரபு உள்ளிட்ட பலர் நடித்த கிஸ் திரைப்படம் முதல் நாளில் 40 லட்சம் வசூல் செய்த நிலையில், சனிக்கிழமை அதன் வசூல் சற்றே அதிகரித்து 68 லட்சமாக உயர்ந்தது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை பெரிய முன்னேற்றம் இல்லாமல் அதே 68 லட்சம் தான் வசூல் வந்துள்ளது என்றும் 3 நாட்களில் மொத்தமாக 1.76 கோடி வசூல் வந்துள்ளதாக சாக்னிக் வெப்சைட் தகவல் தெரிவித்துள்ளது. குறைந்த பட்சம் 10 முதல் 20 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நடத்த கவினுக்கு திறமை இருந்தும் இந்த படம் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை என்பது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Vijay antony s Sakthi Thirumagan beats Kavin s Kiss at the first week Box Office clash
Photo Credit:

வெற்றித் திருமகன்: விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் தான் கடந்த வாரம் வெளியான 4 படங்களில் வெற்றித் திருமகனாக மாறியுள்ளது. முதல் நாளில் 90 லட்சம் மட்டுமே வசூல் செய்த அந்த படம் 2வது நாளில் 1.3 கோடி ரூபாயும் ஞாயிற்றுக்கிழமை 1.59 கோடி ரூபாய் என வசூல் அதிகரித்த நிலையில், இதுவரை 3.79 கோடி ரூபாய் வசூலை இந்தியளவில் ஈட்டியுள்ளதாக சாக்னிக் தகவல் வெளியிட்டுள்ளது. விஜய் ஆண்டனி படம் மற்ற படங்களை விட அதிகம் வசூல் செய்தாலும், பிச்சைக்காரன் படத்தை போல மீண்டும் ஒரு பெரிய வெற்றியை விஜய் ஆண்டனி கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. அடுத்த வாரமும் சக்தித் திருமகன் ஓடினால் அதிக பட்சம் 10 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X