விஜய் மறக்காமல் வாழ்த்துச் சொன்ன புதுமுக இயக்குநர் யார் தெரியுமா?

By Vignesh Selvaraj

சென்னை : நடிகர் விஜய், திரையுலகில் புதிதாக சாதிக்க வரும் இளைஞர்களில் தன்னைக் கவர்ந்தவர்களுக்கு எப்போதுமே வாழ்த்துக் கூறி அவர்களை ஊக்குவிப்பார். அந்த வகையில், அவர் சமீபத்தில் வாழ்த்திய புது வரவு இயக்குநர் அருண்ராஜா காமராஜ்.

அருண்ராஜா காமராஜ் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் ஆகியோரை வைத்து கிரிக்கெட்டை மையப்படுத்திய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தை அருண்ராஜா காமராஜின் நண்பர் சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்.

Vijay appreciates new coming director

இந்தப் படத்திற்கு 'கனா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இந்நிலையில், அருண்ராஜா காமராஜை தொலைபேசி வழியாக வாழ்த்தியிருக்கிறார் விஜய்.

இதுகுறித்து அருண்ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். "இதயதளபதி விஜய் அண்ணா, நீங்கள் எப்போதும் மற்றவர்களை வாழ்த்தவும், ஊக்கப்படுத்தவும் மறந்ததே இல்லை. காலை எழுந்தவுடன் உங்களது வாழ்த்தை பார்த்ததும் எனக்கு மும்மடங்கு புத்துணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நாள் எனது கரியரில் சிறப்பான நாள்" என்று தெரிவித்துள்ளார்.

விஜய் ரசிகர்கள் பலரும் அருண்ராஜா காமராஜுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சிவகார்த்திகேயனின் கல்லூரி நண்பரான அருண்ராஜா காமராஜ் இயக்குநராவதற்கு முன்பே, பாடலாசிரியர், நடிகர் என பிரபலமாகிவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X