»   »  மூன்றாவதாகவும் விஜய் - அட்லீ காம்பினேஷன்! - ஒன் இந்தியா எக்ஸ்குளுசிவ்

மூன்றாவதாகவும் விஜய் - அட்லீ காம்பினேஷன்! - ஒன் இந்தியா எக்ஸ்குளுசிவ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்றைய நிலையில் கோலிவுட்டின் சீனியர் ஜுனியர் இயக்குநர்கள் எல்லோருக்குமே வயிற்றெரிச்சலைத் தந்துகொண்டிருப்பது அட்லீ தான். இரண்டாவது படத்திலேயே விஜய்யை இயக்க 'யார் சாமி இவன்?' என்று மூக்கில் விரலை வைத்த கூட்டம், அதற்கு அடுத்தும் விஜய் படத்தைக் கைப்பற்றியுள்ள அட்லீயை நிறையவே பொறாமையோடு பார்க்கிறது. அட்லீயின் சம்பளமும் 12 கோடி, 13 கோடி என வரும் தகவல்கள் நொந்த புண்ணில் வேலை பாய்ச்சுகிறது.

அவர்கள் வயிற்றெரிச்சலில் எல்லாம் இன்னும் ஒரு படி நெய்யை எடுத்து ஊற்றுவது போல ஒரு எக்ஸ்குளுசிவ் செய்தி வந்திருக்கிறது. இப்போது அட்லீ படத்தில் நடிக்கும் விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். அதற்கும் அடுத்து மீண்டும் அட்லீக்கே தன் படத்தை இயக்கும் வாய்ப்பை தந்திருக்கிறாராம். இடையில் அட்லீயுடன் விஜய்க்கு மனக்கசப்பு என்று வந்த செய்தியை எல்லாம் பொய்யாக்கி இருக்கிறது இந்த செய்தி.

Vijay - Atlee to join together for the third time

அஜித் தனது படங்களை இயக்கும் வாய்ப்பை தொடர்ந்து சிவாவுக்கு வழங்குகிறார். அது போல விஜய் தனது கூடாரத்துக்கு அட்லீயை செலக்ட் செய்துவிட்டார் என்கிறார்கள்.

எது எப்படியோ அந்த படத்துக்கான அட்லீயின் சம்பளம் விஜய் சம்பளத்துக்கு நிகராக இருக்கும் என்று இப்போதே பேச்சு எழுந்துவிட்டது.

- ஒன்இந்தியா

English summary
Sources says that Vijay - Atlee combination will continue after Murugadass project.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil