»   »  விஜய் - அட்லீ படம் இன்று பூஜையுடன் தொடங்கியது!

விஜய் - அட்லீ படம் இன்று பூஜையுடன் தொடங்கியது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

‘புலி' படத்திற்கு பிறகு தாணு தயாரிப்பில் அட்லி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

சிம்புதேவன் இயக்கும் ‘புலி' படத்தில் விஜய் சம்பந்தப்பட்ட பணிகள் அனைத்தும் தற்போது முடிவடைந்துவிட்ட நிலையில், அட்லி படத்தில் நடிக்க விஜய் தயாரானார்.

‘புலி' படம் முடிந்த கையோடு விடுமுறையைக் கொண்டாட லண்டன் சென்றிருந்த விஜய் நேற்று திரும்பினார்.

பூஜை

பூஜை

இன்று காலை விஜய்-அட்லி இணையும் புதிய படத்தின் பூஜை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள கேரளா ஹவுஸில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

வேட்டி சட்டையில்

வேட்டி சட்டையில்

இந்த தொடக்கவிழாவில், இயக்குனர் அட்லி தனது மனைவியுடன் கலந்துகொண்டார். மேலும், விஜய் இந்த விழாவுக்கு வேஷ்டி, சட்டை அணிந்துகொண்டு கலந்துகொண்டார்.

ஜிவி பிரகாஷ்

ஜிவி பிரகாஷ்

இந்த விழாவில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் உள்ளிட்ட படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

பங்கேற்றவர்கள்

பங்கேற்றவர்கள்

மேலும், தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், இயக்குனர் ‘அட்டக்கத்தி' ரஞ்சித், பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அழகம்பெருமாள், தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ராதாகிருஷ்ணன், நடிகர் ‘நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

கலைப்புலி தாணு

கலைப்புலி தாணு

விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அன்புடன் வரவேற்றார்.

வரும் ஆகஸ்ட் மாதம் கலைப்புலி தாணு தயாரிக்கும் ரஜினி படத்தின் பூஜை நடக்கவிருக்கிறது. ஒரே நேரத்தில் ரஜினி, விஜய் படங்களைத் தயாரித்து கோடம்பாக்கத்தை வாய் பிளக்க வைத்துள்ளார் தாணு.

ட்விட்டரில் ட்ரெண்டிங்

ட்விட்டரில் ட்ரெண்டிங்

விஜய்யின் இந்த புதுப்பட பூஜை இப்போது ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை ட்ரெண்டிங்கில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது #Vijay59.

English summary
Kalaipuli Thanu's Vijay starring Atlee project has been kick started today with a traditional pooja in Chennai ECR.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil