Don't Miss!
- News
பரந்தூர் ஏர்போர்ட் உறுதி.. பிரச்சனையை தமிழ்நாடு அரசுதான் தீர்க்கனும்: மத்திய அமைச்சர் சிந்தியா
- Technology
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Sports
சுப்மன் கில் தான் தொடக்க வீரர்..ராகுல் அந்த பணியை செய்ய மாட்டாரா? முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சாடல்
- Lifestyle
வார ராசிபலன் 05 February to 11 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமா இல்லன்னா பணஇழப்பு ஏற்படும்
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அட்லீ வீட்டில் நடந்த வாரிசு ஃபங்ஷன்... சர்ப்ரைஸ் கொடுக்க முதல் ஆளாக சென்ற விஜய்!
சென்னை: ராஜா ராணி மூலம் இயக்குநரான அட்லீ, தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படம் அடுத்தாண்டு வெளியாகிறது.
இந்நிலையில், தனது மனைவி ப்ரியா கர்ப்பமாகியுள்ளதாக இயக்குநர் அட்லீ சில தினங்களுக்கு முன்னர் ட்வீட் செய்திருந்தார்.
லவ் டுடே படத்தை பாராட்டிய இயக்குநர் அட்லீ.. துள்ளி குதித்த இவானா.. நன்றி சொன்ன பிரதீப்!

அட்லீ வீட்டில் விசேஷம்
இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்து இயக்குநர் ஆனவர் அட்லீ. முதல் படமான ராஜா ராணி மூலம் கவனம் ஈர்த்த அட்லீ, அடுத்து விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தினார். தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் இணைந்துள்ள அட்லீ, ஜவான் படத்தை இயக்கி வருகிறார். மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படம் அடுத்தாண்டு திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், அட்லீ வீட்டில் ஒரு முக்கியமான விஷேசம் நடந்து முடிந்துள்ளது.

அட்லீ கொடுத்த வாரிசு அப்டேட்
அட்லீ நீண்ட நாட்களாக காதலித்து வந்த சீரியல் நடிகை பிரியாவை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். சீரியல் நடிகையான பிரியா சிங்கம் உட்பட சில படங்களிலும் நடித்துள்ள்ளார். இந்நிலையில், அட்லீயின் மனைவி பிரியா, 8 ஆண்டுகளுக்குப் பிறகு கர்ப்பம் ஆகியுள்ளார். இதுகுறித்து கடந்த வாரம் டிவிட்டரில் பதிவிட்டிருந்த அட்லீ, "எங்களது குடும்பம் வளர்ச்சி அடைகிறது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம். ஆம்! நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம். இந்த அழகான பயணம் முழுக்க உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் ஆசீர்வாதங்களும் எங்களுக்கு வேண்டும். அன்புடன் அட்லீ, பிரியா, பெக்கி", என தங்களது செல்ல நாய் குட்டியுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்திருந்தார்.

வாரிசு ஃபங்கஷனில் விஜய்
இதனையடுத்து பலரும் அட்லீ - பிரியா தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றுள்ளது. இதில் முக்கியமான பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில், நடிகர் விஜய் முதல் ஆளாக அங்கு சென்றுள்ளார். நேரில் சென்று அட்லீ - பிரியா தம்பதியனரை வாழ்த்திய விஜய், உங்கள் வாரிசை வரவேற்கிறேன் என்றும் தெரிவித்தாராம். அட்லீ வீட்டு விஷேசத்தில் விஜய் நேரில் சென்று கலந்துகொண்டது, இருவருக்கும் இடையேயான அன்பை காட்டுவதாக அமைந்துள்ளது.

விரைவில் விஜய் - அட்லீ கூட்டணி
முன்னதாக அட்லீயின் பிறந்தநாள் பார்ட்டியிலும் விஜய் கலந்துகொண்டு நடனம் ஆடியிருந்தார். அதில் ஷாருக்கானும் விஜய்யுடன் டான்ஸ் ஆடியது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ இணையத்திலும் வைரலாகி இருந்தது. இந்நிலையில், ஜ்வான் படம் முடிந்ததும் விஜய் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளாராம் அட்லீ. இதுகுறித்து ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், நேற்று பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொண்டது இந்த கூட்டணியை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. விஜய்யும் அடுத்து தளபதி 67 முடித்துவிட்டு, அட்லீயின் கதைக்கு ரெடியாவார் என தெரிகிறது. இதனிடையே அட்லீ வீட்டு விஷேசத்தில் விஜய் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.