நயன்தாரா திருமணத்தில் விஜய் கலந்து கொண்டாரா? லீக்கான வீடியோவால் ரசிகர்கள் குஷி!
சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்டதாக ஒரு வீடியோ இணையத்தில் கசிந்து டிரெண்டாகி வருகிறது.
Recommended Video
ஜூன் 9ம் தேதியான இன்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் பார்க் ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
ரஜினிகாந்த், ஷாருக்கான், கார்த்தி, போனி கபூர், டிடி நீலகண்டன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

நயன்தாராவுக்கு டும் டும் டும்
ஜூன் 9ம் தேதியான இன்று நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் பார்க் ஹோட்டலில் இந்த நட்சத்திர ஜோடியின் திருமணம் நடைபெற்றது. பலத்த பாதுகாப்புடன் திருமண விழா களைகட்டியது.

ரஜினி, ஷாருக்கான்
லேடி சூப்பர்ஸ்டார் திருமணத்தில் சூப்பர்ஸ்டார் பங்கேற்காமல் இருப்பாரா? நடிகர் ரஜினிகாந்த் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார். பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் தன்னுடன் ஜவான் படத்தில் ஜோடியாக நடித்து வரும் நயன்தாராவின் திருமணத்திற்காக பக்கவாக ரெடியாகி கலந்து கொண்ட புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

ப்ளூ ஷர்ட்டில் விஜய்
இந்நிலையில், நடிகர் விஜய்யும் இந்த திருமணத்தில் பங்கேற்றுள்ளதாக ஒரு வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது. நீல நிற சட்டை அணிந்து செம ஸ்மார்ட்டாக நடிகர் விஜய் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளார். ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

சிவகாசி முதல் பிகில் வரை
சந்திரமுகி படத்தில் நடித்த கையோடு விஜய் நடித்த சிவகாசி படத்தில் கோடம்பாக்கம் ஏரியா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இருப்பார் நயன்தாரா. பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியான நயன்தாரா அட்லி இயக்கத்தில் கடைசியாக வெளியான பிகில் படத்திலும் விஜய்க்கு ஜோடியாக இணைந்து நடித்திருப்பார்.

மணமக்களுக்கு வாழ்த்து
தளபதி 66 படத்திற்காக ஹைதராபாத்தில் பிசியாக ஷூட்டிங்கில் இருந்தாலும், உடன் நடித்த நடிகை நயன்தாராவின் அழைப்பை ஏற்று கலந்து கொண்ட நடிகர் விஜய் இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவை மனமார வாழ்த்தி உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இது நயன்தாரா திருமணத்தில் எடுத்த வீடியோவா அல்லது வேறுவொரு திருமணத்தில் விஜய் கலந்து கொண்டபோது எடுத்த வீடியோவா என்பது தெளிவாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











