»   »  துப்பாக்கியா? போக்கிரியா? குழம்பித் தவிக்கும் விஜய் ரசிகர்கள்!

துப்பாக்கியா? போக்கிரியா? குழம்பித் தவிக்கும் விஜய் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் பிறந்தநாளுக்கு எந்தப் படத்தைத் திரையிடுவது என்று விஜய் ரசிகர்கள் குழம்பித் தவித்து வருகின்றனர்.

நாளைய தினம் விஜய் தன்னுடைய 42 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். இதனையொட்டி அவரது ரசிகர்கள் அன்னதானம், ரத்த தானம் போன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

இதுதவிர சமூக வலைதளங்களில் காமன் டிபி, கட்-அவுட்கள் என அமர்க்களப்படுத்தி வருகின்றனர். மேலும் நாளை விஜய் நடித்த படங்களின் சிறப்புக் காட்சிகளைத் திரையிடவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

Vijay Birthday Celebration Begins

கோவில்பட்டி பகுதியில் ஜில்லா, குழித்துறையில் துப்பாக்கி என்று வெளியூர் ரசிகர்கள் முடிவு செய்து கொண்டாட்டத்திற்கு தயாராகி விட்டனர்.

ஆனால் சென்னையில் உள்ள ரசிகர்கள் எந்தப் படத்திற்கு சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யலாம் என குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை ரசிகர்களைப் பொறுத்தவரை துப்பாக்கி, போக்கிரி 2 படங்களுமே விருப்ப லிஸ்டில் இருக்கின்றன. எனினும் இரண்டில் ஒரு படத்தைத் தான் தேர்வு செய்யமுடியும் என்பதால் எந்தப் படத்தை திரையிடலாம் என்று சமூக வலைதளங்களில் வாக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

வாக்கெடுப்பில் போக்கிரியே முன்னிலை வகிப்பதால் நாளை 6.30 மணிக்கு வெற்றி திரையரங்கில் ஏற்பாடு செய்திருக்கும் சிறப்புக் காட்சியில், போக்கிரி திரையிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல தமிழ்நாடு முழுவதும் சிறப்புக் காட்சிகளுக்கு விஜய் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

English summary
Tomorrow Vijay Fans Arranged Special show in Vettri Theatres.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil