»   »  விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல்.... நான்கு சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ்!

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல்.... நான்கு சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் பிறந்த நாளில் அவரது ரசிகர்களை மகிழ்விக்க பிரபல திரையரங்கில் 4 மெகாஹிட் படங்கள் திரையிடப்பட உள்ளதாக திரையரங்கு நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முதல் நிலை நடிகர்களுள் ஒருவர் விஜய். அவரது 43-வது பிறந்தநாள் வருகிற நாளை ஜுன் 22-ஆம் தேதி வருகிறது.


ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய் பிறந்த நாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அவரது ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கி விட்டனர். அதன் ஒருபகுதியாக விஜய் ரசிகர்களில் 43 பேர் உடலுறுப்பு தானம் செய்திருந்தார்கள்.
நலத் திட்ட உதவிகள்

நலத் திட்ட உதவிகள்

ஏராளமான நலத் திட்ட உதவிகள் செய்து விஜய்யின் பிறந்தநாளை கொண்டாட அவரது ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஏஜிஎஸ் தியேட்டர்

ஏஜிஎஸ் தியேட்டர்

இந்நிலையில், விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக சென்னையில் உள்ள ஏ.ஜி.எஸ். திரையரங்கில் விஜய்யின் 4 மெகாஹிட் படங்கள் போக்கிரி, நண்பன், துப்பாக்கி, தெறி ஆகிய 4 படங்களும் திரையிடப்படுகின்றன.
ப்ரீ டிக்கெட்

ப்ரீ டிக்கெட்

இந்தப் படங்களைக் காண ஜோடிகளாக வரும் விஜய் ரசிகர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படுகிறது. அதற்காக விஜய் ரசிகர்கள், விஜய்யின் பிரபலமான வசனங்களை டப்மாஷ் மூலம் அனுப்ப வேண்டுமாம். இதில் தேர்ந்தெடுக்கப்படும் விஜய் ரசிகர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என்று திரையரங்க சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
English summary
A Multiplex Theater has announced screening of 4 Vijay hit movies as a part of Vijay birthday celebrations.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil