Don't Miss!
- News
கூட்டணிக்கு அச்சாரம்.. இன்று மநீம செயற்குழு.. இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? அறிவிப்பாரா கமல்ஹாசன்?
- Automobiles
சட்டபடி இது தப்புங்க! ஆட்டோ எக்ஸ்போவில் தில்லாக காட்சியளித்த மாடிஃபைடு கார்கள்... எல்லாமே செம்ம அழகா இருக்கு!
- Lifestyle
Today Rasi Palan 25 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு முதலீடும் செய்வதைத் தவிர்க்கவும்...
- Finance
Budget 2023: பட்ஜெட்டில் இப்படி ஒரு சர்பிரைஸ் கிடைக்குமா.. தங்கம் இறக்குமதியாளர்களுக்கு வாய்ப்பு?
- Sports
பந்துவீச்சில் மாற்றம் செய்தேன்.. இரட்டிப்பாக உழைப்பதில் மகிழ்ச்சி.. டி20 தொடருக்கு ரெடி - ஹர்திக்
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
சொந்த செலவில் 100 ரசிகர்களுடன் மணாலிக்கு டூர்... இந்த நல்ல மனுசன் படத்தையாப்பா பாய்காட் பண்ணீங்க?
ஹைதராபாத்: தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா.
தொடர்ந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்துள்ள விஜய் தேவரகொண்டாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'லைகர்' திரைப்படம் பாய்காட் பிரச்சினையால் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டமாக விஜய் தேவரகொண்டா அறிவித்துள்ளது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
வெளியானது சந்தீப் ரெட்டி வங்கா, ரன்பீர் கபூர் கூட்டணியின் “அனிமல்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் !

டோலிவுட் சாக்லேட் பாய்
2011ம் ஆண்டு வெளியான நுவ்வில திரைப்படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா. 2017ல் ரிலீஸான அர்ஜுன் ரெட்டி விஜய் தேவரகொண்டாவை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. அதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம், நோட்டா, டியர் காம்ரேட் படங்கள் விஜய் தேவரகொண்டாவுக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்தது. அதேநேரம் இறுதியாக அவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான லைகர் பாய்காட் பிரச்சினையால் மிகப் பெரிய தோல்வியை தழுவியது.

ரசிகர்களுடன் இன்பச் சுற்றுலா
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவான லைகர் படத்தில் மைக் டைசனும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் பாய்காட் பிரச்சினையால் பாக்ஸ் ஆபிஸிலும் படம் மரண அடி வாங்கியது. இதனால் தனது சம்பளத்தில் இருந்து பல கோடிகளை திருப்பிக் கொடுத்தார் விஜய் தேவரகொண்டா. லைகர் பட தோல்வியின் போது பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்ட விஜய் தேவரகொண்டா, தனது ரசிகர்களுக்காக செம்ம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதாவது சொந்த செலவில் 100 ரசிகர்களை மணாலிக்கு டூர் கூட்டி செல்லவுள்ளாராம்.

இன்ஸ்டாவில் பதிவு
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதன்படி, புத்தாண்டை முன்னிட்டு அவர் தனது 100 ரசிகர்களை சுற்றுலாவுக்கு அனுப்ப விரும்புவதாவும், எங்கே செல்ல வேண்டும் என்று ஆசை இருக்கிறது என்பதை சொல்ல வேண்டும் என கடந்த 25ம் தேதி பதிவிட்டிருந்தாராம். அதன்படி பலரும் மலைப்பிரதேசங்களுக்கு விருப்பம் தெரிவித்திருந்தனர். இதனால் அனைவரையும் மணாலிக்கு கூட்டிச் செல்ல முடிவெடுத்துள்ளதாக தனது இன்ஸ்டா பதிவில் கூறியுள்ளார்.

எல்லாம் என்னோட செலவு தான்
அதில், "புத்தாண்டு வாழ்த்துகள், என் அன்பே. இது ஒரு 'தேவேராசாந்தா அப்டேட்'. உங்களில் 100 பேரை எனது சொந்த செலவில் டூர் கூட்டிச் செல்கிறேன். உணவு, தங்குமிடம் உட்பட அனைத்தும் எனது செலவுதான். நீங்கள் விரும்பியபடி உங்களில் 100 பேரை 5 நாள் பயணமாக மணாலிக்கு அனுப்புகிறேன். பனி மூடிய மலைகளைப் பார்க்கப் போகிறீர்கள். நீங்கள் கோயில்களையும், மடங்களையும் பார்க்கப் போகிறீர்கள், நாங்கள் நிறைய செயல்களைத் திட்டமிட்டுள்ளோம். நீங்கள் 18 வயதுக்கு மேல் இருந்தால், மன்னிக்கவும், நீங்கள் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

ரசிகர்கள் உற்சாகம்
மேலும், "நீங்கள் என்னைப் பின்தொடர்ந்து வருகிறீர்கள், இணைக்கப்பட்டுள்ள 'தேவேரா சாண்டா கூகுள் ஆவணப் படிவத்தை நிரப்பவும், நாங்கள் உங்களில் 100 பேரைத் தேர்வு செய்யப் போகிறோம். உங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன்" எனக் கூறியுள்ளார். இதனால் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தனது லைகர் திரைப்படம் தோல்வியடைந்த போதும், ரசிகர்களுக்காக விஜய் தேவரகொண்டா எடுத்துள்ள இந்த முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர்.