twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலாய்த்த தியேட்டர் ஓனர்: காலில் விழுந்து கட்டியணைத்துக் கொண்ட விஜய் தேவரகொண்டா

    |

    மும்பை: தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்திற்கு எதிர்பார்த்தளவில் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.

    லைகர் திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் மொத்தம் 43 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது.

    'லைகர்' தோல்விக்கு விஜய் தேவரகொண்டா தான் காரணம் என திரையரங்க உரிமையாளர் தேசாய் கடுமையாக விமர்சித்திருந்தார்.

    ஏகே 62 ஹீரோயின் நயன்தாரா இல்லையா?...இவர் தானாமே...இது செம மேட்டரா இருக்கே ஏகே 62 ஹீரோயின் நயன்தாரா இல்லையா?...இவர் தானாமே...இது செம மேட்டரா இருக்கே

    பாய்காட் செய்யப்பட்ட லைகர்

    பாய்காட் செய்யப்பட்ட லைகர்

    விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, மைக்டைசன், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'லைகர்' படத்தை, பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார். குத்துச் சண்டை பின்னணியில் ஸ்போர்ட்ஸ் டிராமா படமாக உருவான லைகர், கடந்த 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பான் இந்தியா படமாக தெலுங்கு, தமிழ், இந்தி என பல மொழிகளில் வெளியான லைகர், மிகப் பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. முன்னதாக இந்தப் படத்தை நெட்டிசன்கள் பாய்காட் செய்து ட்ரோல் செய்திருந்ததே தோல்விக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

    பாலிவுட் படங்கள் பாய்காட்

    பாலிவுட் படங்கள் பாய்காட்

    லைகர் வெளியாவதற்கு முன்னர், விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே இருவரும் தொடர்ச்சியாக ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். அப்போது பாலிவுட் நட்சத்திரங்கள் பாய்காட் செய்யப்படுவது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அதாவது, இந்தி முன்னணி நடிகர்கள் அமீர்கான், அக்சய் குமார், டாப்ஸி ஆகியோரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்ததுடன், அவர்களின் படங்களையும் பாய்காட் செய்தனர். இதுகுறித்து விஜய் தேவரகொண்டா நெட்டிசன்களுக்கு எதிராக மிகவும் காட்டமாக பதிலளித்தார். இதனால், லைகர் படத்தையும் நெட்டிசன்கள் பாய்காட் செய்யத் தொடங்கினர்.

    நெட்டிசன்களுக்கு சவால்

    நெட்டிசன்களுக்கு சவால்

    நெட்டிசன்கள் பாய்காட் செய்வதை கேலிசெய்த விஜய் தேவரகொண்டா, லைகர் படத்தை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது, அப்படி எதும் செய்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என சவால் விட்டார். ஆனால், நெட்டிசன்கள் தொடர்ந்து பாய்காட் செய்து வந்ததால், ரிலீஸான முதல் நாளில் இருந்தே லைகர் படத்தின் வசூல் மந்தமானது. இந்நிலையில், லைகர் தோல்விக்கு விஜய் தேவரகொண்டாவின் திமிரு தான் காரணம் என, கெய்ட்டி கேலக்ஸி, மராத்தா மந்திர் போன்ற மல்டிபிளக்ஸ் திரையரங்குகளின் உரிமையாளர் மனோஜ் தேசாய் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், விஜய் தேவரகொண்டா ஆட்டிடியூட் காட்ட வேண்டாம், அமீர்கான், டாப்ஸி, அக்சய் குமார் ஆகியோருக்கு என்ன நடந்தது என அவர் பார்க்கவில்லையா எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

    காலில் விழுந்த விஜய்

    காலில் விழுந்த விஜய்

    மேலும், "இப்படி திமிராக நடந்துகொள்வதாக இருந்தால், ஓடிடி படங்களில் மட்டும் நடித்துவிட்டு போகலாம். திரையரங்குகளின் வருமானத்தில் சிக்கலை ஏற்படுத்த வேண்டாம்" என விமர்சித்திருந்தார். இந்த விமர்சனம் வைரலானதை அடுத்து, திரையரங்க ஓனர் தேசாயை விஜய் தேவரகொண்டா நேரில் சந்தித்தார். அப்போது அவரின் காலில் விழுந்து கட்டியணைத்துக் கொண்ட விஜய் தேவரகொண்டா, லைகர் படத்தின் ப்ரோமோஷனுக்காக 30 நாட்கள் கடுமையாக உழைத்ததாகவும் கூறியதாகத் தெரிகிறது.

    மன்னித்துவிட்ட தேசாய்

    மன்னித்துவிட்ட தேசாய்

    மேலும், "நெட்டிசன்கள் குறிப்பிட்ட ஹீரோ, ஹீரோயினையோ அல்லது அவர்கள் படங்களை மட்டும் பாய்காட் செய்யவில்லை. அந்தப் படத்தில் பணியாற்றிய மொத்த குழுவினரின் உழைப்பையும் பாய்காட் செய்வதால் தான், அவ்வாறு பேசியதாக" விளக்கமளித்துள்ளார். இதனையடுத்து விஜய் தேவரகொண்டாவை புகழ்ந்து பேசியுள்ள தேசாய், "அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு, எப்போதும் தொடர்ந்து அவர் நடிக்கும் படங்களை வெளியிடுவேன்" எனவும் உறுதியளித்துள்ளார். 'லைகர்' படத்தின் தோல்வியோடு, தேசாயின் விமர்சனத்தாலும் நொந்து போயிருந்த விஜய் தேவரகொண்டா, இப்போது கூல் செய்துவிட்டு ஐதராபாத் திரும்பியுள்ளார்.

    English summary
    Vijay Devarakonda starrer 'Liger' was a big flop. Theater owner Desai had criticized Vijay Devarakonda's arrogant speech as the reason for this. After this, Vijay Devarakonda met Desai in personally
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X