Vijay Deverakonda Accident: அச்சச்சோ.. என்னாச்சு.. விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா..

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா பயணித்த கார் விபத்துக்குள்ளானது. புட்டப்பர்த்திக்கு சென்றுவிட்டு தனது நண்பர்களுடன் திரும்பிக் கொண்டு இருக்கும்போது, ஜோகுலாம்பா கதவால் மாவட்டத்தில் உள்ள உந்தவல்லி அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் இன்றி தப்பினார். இருப்பினும், காரின் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Actor Vijay Deverakonda Escapes Unharmed In Car Accident Near Jogulamba

விபத்து தொடர்பான விரிவான விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. இந்த தகவல் அவரது ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இவருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் தசராவின் போது நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல்கள் வெளியானது. இது உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் அவர்கள் தரப்பில் இருந்து மறுப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பதால், இந்த தகவல் உண்மைதான் என்று பலரும் பேசுகிறார்கள்.

நடிகர் விஜய் தேவரகொண்டா தென்னிந்திய சினிமாவில் குறிப்பாக தெலுங்கு சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவரது படங்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகியுள்ளதால் இவருக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். குறிப்பாக கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களைக் கூறலாம். அண்மையில் வெளியான கிங்டம் படம் தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சில தியேட்டர்களில் இருந்து படம் நீக்கப்பட்டது.

காதல்: இவரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் காதலித்து வருவதாக கடந்த சில ஆண்டுகளாக கிசுகிசுக்கள் பரவி வருகிறது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக இருவரும் தெரிவிக்காததால் இந்த தகவல்கள் கிசுகிசுக்களாகவே உள்ளன. கடந்த ஆண்டு ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படமான புஷ்பா 2 படத்தின் கிளைமாக்ஸில் வரும் வில்லனாக விஜய் தேவரகொண்டாதான் கேமியோவாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. படத்தில் விஜய் தேவரகொண்டாவின் முகம் காட்டப்படவில்லை என்றாலும், சென்னையில் நடைபெற்ற புரோமோசன் நிகழ்ச்சியில் ராஷ்மிகா பேசியதை வைத்து இவ்வாறு கூறப்படுகிறது. அவர் தனது மனதுக்கு மிகவும் நெருக்கமானவர் இந்த படத்தில் கேமியோ செய்துள்ளார் என்று பேசினார். அவரது பெயர் ஆங்கிலத்தில் ’வி’-யில் தொடங்குமா என்று கேட்டதற்கு ஆமாம் என்று பதில் அளித்தார். இதனாலே கிளைமாக்ஸ் காட்சியில் வந்தது விஜய் தேவரகொண்டா தான் என்று ரசிகர்கள் தீர்மானித்துவிட்டனர்.

இந்நிலையில், “ நடிகர் விஜய் தேவரகொண்டா பயணித்த கார் விபத்துக்குள்ளானது. புட்டப்பர்த்திக்கு சென்றுவிட்டு தனது நண்பர்களுடன் திரும்பிக் கொண்டு இருக்கும்போது, ஜோகுலாம்பா கதவால் மாவட்டத்தில் உள்ள உந்தவல்லி அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் இன்றி தப்பினார். இருப்பினும், காரின் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில் விஜய் தேவரகொண்டா தனது நண்பரின் மற்றொரு காரில் ஏறிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X