twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்..கலெக்‌ஷன் மட்டும் இவ்வளவா? லைகர் வசூல் விவரம்!

    |

    சென்னை : விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான லைகர் திரைப்படத்திற்கு மோசமான விமர்சனம் வந்த போதும் இரண்டாம் நாள் வசூல் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

    Recommended Video

    Liger Public Review |Liger Tamil Cinema Review | Vijay Deverakonda |*Review

    பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ள லைகர் படத்தில் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஆகஸ்ட் மாதம் 25ந் தேதி வெளியானது.

    படுதோல்வியடைந்த லைகர்… விரக்தியின் உச்சியில் விஜய் தேவரகொண்டா… அதிர்ச்சியில் ரசிகர்கள்! படுதோல்வியடைந்த லைகர்… விரக்தியின் உச்சியில் விஜய் தேவரகொண்டா… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

    லைகர்

    லைகர்

    லைகர் படத்தின் கதை என்று பார்த்தால் புதிதாக எதுவுமே இல்லை, ஏற்கனவே ஜெயம்ரவி நடித்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி கதை தான். தன் அப்பா தவறவிட்ட சாம்பியன் பட்டத்தை பெற முயற்சிக்கும் மகனின் போராட்டம்தான் லைகர். மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸில் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் தன் சொந்த ஊரிலிருந்து கிளம்பி மும்பை வருகின்றார் விஜய் தேவரகொண்டா.

    இதுதான் கதை

    இதுதான் கதை

    அங்கே தன் தாய் ரம்யாகிருஷ்ணனுடன் சேர்ந்து தெருவோரத்தில் டீ கடை நடத்துகிறார். மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையில் புகழ்பெற்ற பயிற்சியாளரை சந்தித்து பயிற்சியில் இணையும் விஜய் தேவரகொண்டா வாழ்வில் அனன்யா பாண்டே குறுக்கிட சில பல பிரச்சினைக்குப் பின் இறுதியாக அவர் அந்தப் பட்டத்தை வென்றாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

    பாவம் மைக் டைசன்

    பாவம் மைக் டைசன்

    இந்த கதையில் புது விஷயம் என்னவென்றால் அது குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் மட்டுமே அவரும் கடையில் இவரிடம் ஆடிவாங்குவதை பார்க்கும் போது என்னாடா இது என நினைக்க வைத்துவிடுகிறது. 25ந் தேதி வெளியான இத்திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் கடுப்பாகி அழாத குறையாக படத்தை விமர்சித்தனர். இணையத்தில் நெட்டிசன்கள் கண்டபடி விமர்சித்து வருவதால் விஜய்தேவரகொண்ட டென்ஷனாக இருப்பதாக கூறப்படுகிறது.

    லைகர் வசூல் எத்தனை கோடி?

    லைகர் வசூல் எத்தனை கோடி?

    இந்நிலையில், லைகர் திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.படம் 25ந் தேதி வெளியான நிலையில், முதல் நாள் வசூலாக உலகம் முழுவதும் 25 கோடி வரை படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. அதில் 15 கோடி ரூபாய் தெலுங்கு மாநிலத்திலிருந்தும், அதேபோல பீகார் மற்றும் ஒடிசாவில் மாநிலத்தில் கணிசமான வசூலை பெற்றுள்ளது.

    மோசமான விமர்சனம்

    மோசமான விமர்சனம்

    குஜராத்தில் வெறும் 30 லட்சம் மட்டுமே வசூலாகி உள்ளதாகவும், கிழக்கு பஞ்சாபில் எதிர்பார்த்ததை விட மோசமான வசூலை தந்துள்ளது. இதனிடையே பட தயாரிப்பு நிறுவனம் ரூ.33.12 கோடி வசூலாகி உள்ளதாக அறிவித்துள்ளது. நஷ்டத்திலிருந்து தப்பிக்க இன்னும் 70 கோடி வரை வசூலிக்க வேண்டும். நெகட்டிவ்வான விமர்சனங்கள் அதிகம் வந்துள்ளதால் படம் வசூலில் தடுமாறும் என பாலிவுட் வட்டாரங்கள் கூட தெரிவிக்கின்றன. லைகர் திரைப்படம் முதல் நாள் முதல் காட்சியிலேயே நெட்டிசன்ஸ்களால் மோசமான விமர்சனத்தை பெற்ற போதும் ரூ.33.12 கோடி வசூலாகி உள்ளது மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

    English summary
    The box office numbers for Vijay Deverakonda and Ananya Panday's 'Liger'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X