விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் போக விரும்பும் வாரிசு நடிகை...விஜய் என்ன சொல்லிருக்கார் தெரியுமா?

மும்பை : தெலுங்கில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. அர்ஜுன் ரெட்டி, நோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.இவருக்கு தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் ரசிகர்கள் அதிகம்.

தற்போது லிகர் படத்தின் முலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்க உள்ளார். ஆகஸ்ட் மாதம் இந்த படம் ரிலீசாக உள்ளது. விஜய் தேவரகொண்டாவின் முதல் பான் இந்தியா படமாக இது உருவாகி உள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்ட இடையே காதல், டேட்டிங் என பல கிசுகிசுக்கள் எழுந்தது. இருந்தாலும் விஜய் தேவரகொண்டா மீதான கிரஷ் ரசிகர்களுக்கு குறையவில்லை.

டிரெண்டான ப்ரொமோ

டிரெண்டான ப்ரொமோ

பாலிவுட்டில் பிரபலமான டிவி நிகழ்ச்சிகளில் ஒன்று காஃபி வித் கரன். பிரபல டைரக்டர் கரன் ஜோகர் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில் சிறப்பு விருந்தினராக சாரா அலி கான், ஜான்வி கபுர் இருவரும் கலந்து கொண்டனர். இதன் ப்ரொமோ சமீபத்தில் வெளியிடப்பட்டது.

விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் போக ஆசை

விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் போக ஆசை

இதில் கரன், சாரா, இன்றைய தேதியில் யாருடன் டேட்டிங் செய்ய நீங்க விரும்புகிறீர்கள் என கேட்டார். முதலில் இதற்கு பதிலளிக்க மறுத்த சாரா அலி கான். பிறகு விஜய் தேவரகொண்டா என பதிலளித்தார். இந்த ப்ரொமோ செம டிரெண்டாகி வருகிறது.

விஜய்யின் ரியாக்ஷன் என்ன

விஜய்யின் ரியாக்ஷன் என்ன

இந்த சமயத்தில், விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, நீங்கள் தேவரகொண்டா என்பதை சொல்லி விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. செம க்யுட். பெரிய ஹக் மற்றும் எனது அஃபெக்ஷன் உடன் என குறிப்பிட்டு ஹார்ட் எமோஜியை பதிவிட்டுள்ளார்.

ரிலீசுக்கு தயாராகும் லைகர்

ரிலீசுக்கு தயாராகும் லைகர்

விஜய் தேவரகொண்டா, புரி ஜெகந்நாத் இயக்கும் லைகர் படத்தில் அனன்யா பாண்டே, முன்னாள் பாக்சிங் சாம்பியன் மைக் டைசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இது உள்ளது.

சாராவிற்கு இவர் மீது கிரஷ்ஷா

சாராவிற்கு இவர் மீது கிரஷ்ஷா

காஃபி வித் கரன் நிகழ்ச்சியின் முந்தைய சீசனில் கலந்து கொண்ட சாரா அலி கான், கார்த்திக் ஆர்யான் மீது தனக்கு கிரஷ் இருப்பதாக தெரிவித்தார். ஆனால் லவ் ஆஜ் கல் நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்ட போது தாங்கள் டேட்டிங் செய்வது பற்றி எதையும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக கரன் ஜோகர் உறுதி செய்தார்.

Recommended Video

Thalapathy வேற Level | Vijay பெயரில் இரத்ததான Mobile App *kollywood | Filmibeat Tamil
இது இன்ட்ரஸ்டிங்கா இருக்கு

இது இன்ட்ரஸ்டிங்கா இருக்கு

கரன் ஜோகர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,இந்த காதல் விவகாரங்களை வெளிப்படுத்துவது இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு. கத்ரினா கைஃப்பும் விக்கி கெளசலும் நல்ல உறவில் இருந்தனர். அதை சொன்ன போது முதலில் மறுத்தனர். பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆலியா பட்டும், ரன்பீர் கபுருடன் டேட்டிங் செய்து வருவதாக தெரிவித்தார். அவர்களும் திருமணம் செய்து, குழந்தை பிறக்க போகிறது. இப்போது சாரா அலிகான், கார்த்திக் ஆர்யான் பெயரை சொல்லி உள்ளார் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X