»   »  தனுஷ் படத்தில் காக்கிச்சட்டை போட்டு அறிமுகமாகும் ‘விஜய்’!

தனுஷ் படத்தில் காக்கிச்சட்டை போட்டு அறிமுகமாகும் ‘விஜய்’!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷின் மாரி படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார் விஜய். அவர் தான் ஏற்கனவே முன்னணி நடிகராக இருக்கிறாரே என நீங்கள் குழம்ப வேண்டாம். இந்த விஜய் பாடகர் ஜேசுதாஸின் மகன்.

‘காதலில் சொதப்புவது எப்படி', ‘வாயை மூடி பேசவும்' ஆகிய படங்களை இயக்கி பாலாஜி மோகன், தற்போது தனுஷை வைத்து ‘மாரி' என்னும் படத்தை இயக்கிவருகிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இப்படத்தை தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்' நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் ‘மேஜிக் பிரேம்ஸ்' நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

சேரித் தலைவன்...

சேரித் தலைவன்...

இப்படத்தில் தனுஷ் சேரித் தலைவனாக நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பட போஸ்டர்களும் அதனை உறுதி செய்வது போல் உள்ளது.

விஜய் அறிமுகம்

விஜய் அறிமுகம்

இப்படத்தின் மூலம் பாடகர் ஜேசுதாஸின் மகனும், பாடகருமான விஜய் ஜேசுதாஸ் நடிகராக அறிமுகம் ஆகிறார். படத்தில் முக்கியமான கதாபாத்திரமாம் விஜய் ஜேசுதாஸுக்கு.

நண்பேன்டா...

நண்பேன்டா...

ஏற்கனவே மலையாளப் படம் ஒன்றில் நடித்துள்ள விஜய் ஜேசுதாஸுக்கு, தமிழில் மாரி தான் முதல் படம். விஜய் யேசுதாசும், தனுஷும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காக்கிச்சட்டை...

காக்கிச்சட்டை...

விஜய் ஜேசுதாஸ் இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நடிப்பில் அதிக ஆர்வம் கொண்ட விஜய் ஜேசுதாஸ், முதல் படத்திலேயே போலீஸ் யூனிபார்ம் மாட்டுவதால் மகிழ்ச்சியோடு இருக்கிறாராம்.

ஒரு நாயகன் உதயமாகிறான்...

English summary
Vijay in Dhanush's Maari. No, its not ilaya thalabathy Vijay, but Vijay yesudas, the singer son of KJ Yesudoss, who will play a key role in Dhanush starrer Maari.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil