»   »  அஜீத்தை அடுத்து விஜய் படத்திற்கு வந்த சோதனை: என்ன கொடுமை சார் இது!

அஜீத்தை அடுத்து விஜய் படத்திற்கு வந்த சோதனை: என்ன கொடுமை சார் இது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தை அடுத்து விஜய் படத்திற்கு வெளிநாட்டு படப்பிடிப்பின்போது சோதனை ஏற்பட்டுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் தல 57 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடந்தது. ஆஸ்திரியாவில் படப்பிடிப்பு நடந்தபோது பாதுகாவலர்களையும் மீறி உள்ளூர் ஊடகம் அஜீத்தின் கெட்டப்பை புகைப்படம் எடுத்து செய்தி வெளியிட்டது.


இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது அனைவருக்கும் தெரிந்ததே.


பைரவா

பைரவா

பைரவா படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷின் டூயட் பாடல் காட்சியை சுவிட்சர்லாந்தில் படமாக்கி வருகிறார்கள். படப்பிடிப்பின்போது பார்வையாளர்களில் யாரோ ஒருவர் அதை தனது செல்போனில் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுவிட்டார்.


அதிர்ச்சி

அதிர்ச்சி

தல 57 படத்தின் ஸ்டில் வெளியானபோது அவர்கள் எப்படி அதிர்ச்சி அடைந்தார்களோ விஜய்யின் படக்குழுவினரும் அதே போன்று அதிர்ச்சி அடைந்தனர். விஜய்யின் புகைப்படங்கள் வேறு கசிந்துவிட்டது.


பாதுகாப்பு

பாதுகாப்பு

வீடியோ, புகைப்படம் கசிந்த பிறகு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இனியும் விஜய், கீர்த்தி டான்ஸ் ஆடுவதை யாரும் வீடியோ எடுக்காத வகையில் படக்குழுவினரும் உஷாராக உள்ளனர்.


தொல்லை

தொல்லை

தல 57 படத்தின் ஸ்டில் வெளியானபோது அஜீத் பாதுகாவலர்கள் மீது கோபப்பட்டார். அதன் பிறகு படத்தின் எந்த புகைப்படமும் கசியவில்லை. வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தும்போது இது போன்ற தொல்லைகளை படக்குழுவினர் சந்திக்க வேண்டியுள்ளது.


English summary
After Thala 57 still, Vijay's Bairavaa duet song was recorded by some one and leaked on internet. After this incident, the team has beefed up the security.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil