எங்க அப்பா நியாபகம் வந்துடுச்சுண்ணா.. வாரிசு படத்தை பார்த்து கண்கலங்கிய ரசிகர்.. டிரெண்டாகுது!
சென்னை: நடிகர் விஜய்யின் வாரிசு படம் ஜனவரி 11ம் தேதி வெளியானது. குடும்பங்கள் பார்த்து ரசிக்க வேண்டிய படமாக இந்த முறை ஒரு ஜாலியான படத்தை நடிகர் விஜய் கொடுத்துள்ளார்.
பார்த்து பார்த்து புளித்துப் போன கதை என்றும் பெருசா எமோஷனல் கனெக்ட்டே ஆகவில்லை என்றும் படம் சூப்பர், விஜய் நடிப்பு மற்றும் எமோஷனல் காட்சிகள் கண் கலங்க வைக்கின்றன என வாரிசு படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், இசையமைப்பாளர் தமனுக்கு அடுத்து படத்தை பார்த்து அப்பா நியாபகம் வந்துடுச்சுண்ணா என கலங்கியபடி பேசும் ரசிகர் ஒருவரின் வீடியோ டிரெண்டாகி வருகிறது.

அப்பா சென்டிமென்ட்
வாரிசு படத்தில் அம்மா பாடல் இடம்பெற்ற நிலையில், படம் அம்மா சென்டிமென்ட் படமாக இருக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு சரத்குமாருக்கும் விஜய்க்கும் இடையே ஏற்படும் மோதல் மற்றும் அப்பாவின் அன்புக்காக ஏங்குவது, தனக்கு அடுத்து வாரிசாக விஜய்யை சரத்குமார் வைப்பது என அப்பா சென்டிமென்ட் காட்சிகள் செம சர்ப்ரைஸாக அமைந்திருந்தன.

வசூல் மன்னன்
இந்த பொங்கலுக்கு தியேட்டர் ஓனர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவருக்கும் ரசிகர்களிடம் இருந்து டிக்கெட் மூலமாக மிகப்பெரிய வசூல் செய்து விஜய்யும் அஜித்தும் பாக்ஸ் ஆபிஸ் கல்லா கட்டியுள்ளனர். இருவரும் சேர்ந்து 50 கோடி வசூலை முதல் நாளிலேயே சாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் அஜித் தமிழ்நாட்டில் முதலிடம் என்றால் உலகளவில் விஜய் நம்பர் ஒன் வசூல் மன்னனாக மாறி உள்ளார்.

கண்கலங்கிய தமன்
வாரிசு படத்தை பார்த்து விட்டு இசையமைப்பாளர் தமன் தியேட்டரிலேயே கண் கலங்கி அழுத காட்சிகள் ரசிகர்களை பெருமளவில் உலுக்கி எடுத்தன. இந்நிலையில், தமனை தொடர்ந்து ரசிகர்களும் வாரிசு படத்தை பார்த்து விட்டு கண்ணீருடன் தியேட்டரை விட்டு வெளியேறி வருகின்றனர்.

அப்பா நியாபகம் வந்துடுச்சுண்ணா
அப்படியொரு ரசிகர்கள் கலங்கியபடி வெளியே வந்த நிலையில், அவரிடம் மைக்கை சில யூடியூபர்கள் நீட்ட, அப்பா நியாபகம் வந்துடுச்சுண்ணா என வாரிசு படத்தை பார்த்து விட்டு உருகிப் போய் அவர் பேசிய பேச்சுக்கள் சோஷியல் மீடியாவில் விஜய் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அப்பா இல்லை
எனக்கு அப்பா இல்லைன்னா.. இந்த படம் பார்க்கும் போது அழுதுட்டேன்.. பணம் எல்லாம் முக்கியமில்லை, பாசம் தான் முக்கியம்.. ஆயிரம் முறை கூட இந்த படத்தை பார்ப்பேன்.. எனக்கு அப்பா இல்லைன்னா இந்த படத்தை பார்க்கும் போது அப்பா நியாபகம் வந்துடுச்சு என படம் செமையா இருக்கு என அந்த ரசிகர் உருகி பேசியுள்ள வீடியோ டிரெண்டாகி வருகிறது.

விட்டுக்கொடுக்காத ரசிகர்கள்
தங்கள் நாயகர்களின் படங்கள் விமர்சனங்கள் எப்படி வந்தாலும் அவர்களை திரையில் பார்த்தால் போதும் என்கிற நினைப்புடன் விஜய் மற்றும் அஜித்தை விட்டுக் கொடுக்காமல் அவர்கள் ரசிகர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் உன்னை யாரும் அசைச்சிக்க முடியாது என்கிற வசனம் தான் நினைவுக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











