»   »  விஜய்க்கு மலேசிய ரசிகை கொடுத்த 'மெர்சல்' பரிசு!

விஜய்க்கு மலேசிய ரசிகை கொடுத்த 'மெர்சல்' பரிசு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் சங்கம் சார்பில் மலேசியாவில் நடத்தப்பட்ட நட்சத்திரக் கலைவிழாவில் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் கலந்துகொண்டார்.

அங்கு ஹரிஷ் கல்யாணை சந்தித்த விஜய் ரசிகை ஒருவர் மெர்சல் விஜய் ஓவியத்தை பரிசாக கொடுத்துள்ளார்.

ஹரிஷ் கல்யாண்

ஹரிஷ் கல்யாண்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பரவலாக அறியப்பட்டவர் ஹரிஷ் கல்யாண். தற்போது ஹரிஷ் கல்யாணும், அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ரைஸாவும் ஒன்றாக நடித்து வருகிறார்கள்.

பியார் பிரேமா காதல்

பியார் பிரேமா காதல்

காதல் கதையான இப்படத்திற்கு பியார் பிரேமா காதல் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களை ஈர்ததது. சமீபத்தில் கூட அவர்கள் இருவரின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

நட்சத்திரக் கலைவிழாவில் ஹரிஷ்

நட்சத்திரக் கலைவிழாவில் ஹரிஷ்

தற்போது மலேசியா நட்சத்திர விழாவிற்கு சென்ற ஹரிஷ் கல்யாணுக்கு விஜய் ரசிகை ஒருவர் மெர்சல் விஜய் ஓவியத்தை பரிசாக கொடுத்துள்ளார். விஜய் ரசிகைகோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஹரிஷ்.

விஜய் அண்ணா

"விஜய் அண்ணா கிட்ட கொடுத்திடுங்க, உங்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்" என கூறியதாகத் தெரிவித்துள்ளார் ஹரிஷ் கல்யாண். விலைமதிப்பற்ற தருணம் இது எனக் குறிப்பிட்டுள்ளார் ஹரிஷ். விஜய் ரசிகர்கள் இதை வைரலாக்கி வருகின்றனர்.

விஜய் போகாததால்

விஜய் போகாததால்

விஜய், நட்சத்திர கலைவிழாவுக்கு வருவார் என எதிர்பார்த்து வந்திருக்கிறார் அந்த ரசிகை. விஜய் சீனாவுக்கு சென்றதால் மலேசியா விழாவில் கலந்துகொள்ளவில்லை. அதனால், ஹரீஷிடம் கொடுத்து விஜய்யிடம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்.

English summary
Many of the leading stars participated in the star festival in Malaysia. Biggboss Harish Kalyan, participated in a star festival in Malaysia. Vijay fan met Harish Kalyan, gave a Mersal Vijay art and told to give Vijay.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X