»   »  ரூ. 250க்கும், செல்போனுக்கும் கொலை செய்யப்பட்ட விஜய் ரசிகர்

ரூ. 250க்கும், செல்போனுக்கும் கொலை செய்யப்பட்ட விஜய் ரசிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: ரூ. 250க்கும், செல்போனுக்கும் ஆசைப்பட்டு விஜய் மக்கள் இயக்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் இமயம் ரவி கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவராக இருந்தவர் இமயம் ரவி(48). ஓவியர். விஜய்யின் பைரவா படம் கடந்த 12ம் தேதி ரிலீஸானது. அதற்கு முந்தைய நாள் அதாவது கடந்த 11ம் தேதி அவர் பட ரிலீஸுக்கான ஏற்பாடுகளை கண்காணிக்க வெளியே சென்றுள்ளார்.

Vijay fan murdered for Rs. 250, cellphone

பட ஏற்பாடுகளை பார்க்கச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Vijay fan murdered for Rs. 250, cellphone

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வழிப்பறி கும்பல் ஒன்று ரவியிடம் இருந்த ரூ.250 மற்றும் செல்போனை பறிக்க முயன்றுள்ளது. அவர் போராட அப்போது அந்த கும்பல் அவரை கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.

ரவியின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vijay Makkal Iyakkam Kancheepuram district head Imayam Ravi was murdered for Rs. 250 cash and a cellphone.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil