விஜய்யை பங்கமாக கலாய்த்த விக்னேஷ் சிவன்... கடும் கோபத்தில் விஜய் ரசிகர்கள்
சென்னை : காத்து வாக்கல ரெண்டு காதல் படத்தில் விஜய்யை கலாய்க்கும் வகையில் விக்னேஷ் சிவன், ஒரு சீனை வைத்துள்ளார். இதை பார்த்த விட்டு விஜய் ரசிகர்கள் விக்கி மேல் செம கோபத்தில் இருக்கிறார்கள்.
டைரக்டர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். ரொமான்டிக் காமெடி படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ரிலீஸ் செய்யப்பட்டது.

கேஆர்கே.,விற்கு கிடைத்த விமர்சனம்
2015 ம் ஆண்டே கதை உருவாக்கப்பட்டு, 2016ல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, 2020 ல் படத்தின் டைட்டிலை அறிவித்து, கிட்டதட்ட 7 ஆண்டுகள் காத்திருப்பு மற்றும் உழைப்பிற்கு பிறகு இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. பல முறை தள்ளி வைக்கப்பட்டு இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. பெரும்பாலானவர்கள் சுமார், பார்க்கலாம் என்ற அளவில் தான் விமர்சனம் வழங்கி உள்ளனர்.

கிங்ஸ்லியின் காமெடி
இந்த படத்தில் விஜய் சேதுபதியின் நண்பராக கிங்ஸ்லி நடித்துள்ளார். தாழ்வு மனப்பான்மை கொண்ட , தன்னை துரதிஷ்டசாலி என நம்பும் ஒரு கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஆனால் விஜய் சேதுபதியின் இந்த எண்ணத்தை மாற்றுவதற்காக கிங்ஸ்லி பல முயற்சிகள் எடுப்பதாக படத்தில் காட்டப்பட்டிருக்கும். அவர் எடுக்கும் முயற்சிகள் சொதப்பினாலும், அவரும் தொடர்ந்து முயற்சி செய்வார்.

விஜய் டயலாக் பேசும் கிங்ஸ்லி
இதில் விஜய் சேதுபதியை மோட்டிவேட் செய்வதற்காக, கிங்ஸ்லி ஒரு வசனம் பேசுவதை போல் ஒரு சீன் அமைக்கப்பட்டிருக்கும். அதாவது, பிகில் படத்தில் ஆசிட் தாக்குதலுக்கு ஆளாகி, ரூமிற்குள் அடைப்பட்டு கிடக்கும் அனிதா என்ற கேரக்டரை மோட்டிவேட் செய்வதற்காக விஜய் பேசும் ஒரு சீன் இடம்பெற்றிருக்கும். தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த மோட்டிவேஷனல் சீன்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த சீன் தேவையா தானா
விஜய் பேசும் இந்த சீனை ரீ கிரியேட் செய்து, காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் வைத்துள்ளனர். அதில் ரெடின் கிங்ஸ்லி, விஜய்யை போலவே வசனம் பேசி நடித்திருப்பார். இந்த சீன் காமெடியாக பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் இந்த சீனால் விக்னேஷ் சிவன் மீது, விஜய் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். ஒரு சிறந்த சீனை விக்னேஷ் சிவன் இப்படி செய்திருக்க கூடாது. இப்படி ஒரு சீன் படத்தில் தேவையா என கண்டபடி கேட்டு கோபத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











