ஒரே ட்வீட்...விஜய் ரசிகர்களை மன்னிப்பு கேட்க வைத்த நெல்சன்...அப்படி என்னங்க சொன்னார்?

சென்னை : நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் டைரக்டராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். முதல் படமே கமர்ஷியல் ஹிட் என்பதால் இரண்டாவதாக சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார்.

Recommended Video

Thalapathy என்ன சொன்னாரு தெரியுமா? RJ. Balaji Speech *Kollywood | Filmibeat Tamil

டாக்டர் படம் 100 கோடி வசூலை பெற்றது. விஜய், அஜித் படங்கள் இல்லாமல் மற்ற ஹீரோ ஒருவரின் படம் 100 கோடி வசூலை பெற்றதால் நெல்சன் திலீப்குமாரை ரசிகர்கள் கொண்டாடினர். டாக்டர் பட வெற்றியால் விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் படம், ரிலீசான பிறகு மோசமான விமர்சனங்களையே பெற்றது. இருந்தாலும் 150 கோடிகளை வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

நெல்சனை ட்ரோல் செய்த ரசிகர்கள்

நெல்சனை ட்ரோல் செய்த ரசிகர்கள்

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட், தங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என விஜய் ரசிகர்கள் நெல்சனை சோஷியல் மீடியாவில் அதிகம் ட்ரோல் செய்து வந்தனர். இதனால் ரஜினியை வைத்து நெல்சன் இயக்க உள்ள ஜெயிலர் படத்திற்கும் அதே ட்ரோல்கள் தொடர்ந்து வருகின்றன.

சோஷியல் மீடியாவிற்கு வராத நெல்சன்

சோஷியல் மீடியாவிற்கு வராத நெல்சன்

மோசமான விமர்சனங்களாலும், ஜெயிலர் பட வேலைகளில் பிஸியாக இருப்பதாலும் கடந்த சில மாதங்களாக சோஷியல் மீடியா பக்கமே தலைகாட்டாமல் இருந்தார் நெல்சன். இருந்தும் ட்ரோல்கள் மட்டும் நிற்கவில்லை.

விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்

விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்த சமயத்தில் விஜய்யின் 48 வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக கமல், சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ், வடிவேலு என பிரபலங்கள் போனிலும் சோஷியல் மீடியாவிலும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்தனர். கடந்த இரண்டு நாட்களாக விஜய் பற்றிய தகவல்களே டிரெண்டிங்கில் இருந்தன.

விஜய்யை வாழ்த்திய நெல்சன்

விஜய்யை வாழ்த்திய நெல்சன்

டைரக்டர் நெல்சன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டார். அதில், அன்பான தளபதி விஜய் சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களின் பணிவு, நம்பிக்கை, நிலைத்தன்மை, வசீகரம் என்னை வியக்க வைக்கிறது, எப்போது ஒரு நல்ல ரசிகனாக. .வாழ்க்கையில் நண்பனாக, சகோதரனாக, நலம் விரும்பியாக இருப்பதற்கு நன்றி சார். எப்போதும் கூலாக இருக்கிறீர்கள். லவ் யூ சார் என குறிப்பிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்ட விஜய் ஃபேன்ஸ்

மன்னிப்பு கேட்ட விஜய் ஃபேன்ஸ்

ஆனால் நெல்சனை விடாமல் தொடர்ந்து ட்ரோல் செய்த விஜய் ரசிகர்கள் இந்த ட்வீட்டை பார்த்து விட்டு பலரும் நெல்சனிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். அது மட்டுமல்ல ரஜினி நடிக்கும் அடுத்த படமான ஜெயிலர் படம் வெற்றி அடையவும் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்

ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்

விஜய் மீதான அன்பை வெளிப்படுத்தி ஒரே ஒரு ட்வீட்டை போட்டு, மாதக் கணக்கில் ட்ரோல் செய்தவர்களை மன்னிப்பு கேட்க வைத்து விட்டாரே என நெல்சனை தற்போது நெட்டிசன்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X