»   »  ட்விட்டரில் 'துப்பாக்கி தினம்' கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

ட்விட்டரில் 'துப்பாக்கி தினம்' கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: துப்பாக்கி படம் ரிலீஸாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் துப்பாக்கி தினம் கொண்டாடி வருகின்றனர்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், ஜெயராம் உள்ளிட்டோர் நடித்த துப்பாக்கி படம் ரிலீஸாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் துப்பாக்கி தினம் கொண்டாடி வருகின்றனர். துப்பாக்கி தினம் குறித்த சில ட்வீட்களை பார்ப்போம்.

நிஷாத் நண்பன்

நிஷாத் நண்பன்

கடந்த ஆண்டு இதே நாளில் தியேட்டர்களில் இளையதளபதியின் ரசிகர்கள் பட்டாளம் திரண்டது. துப்பாக்கி தினம். மரணப் படுக்கையிலும் மறக்க முடியாது என்று நிஷாத் நண்பன் என்பவர் தெரிவித்துள்ளார்.

பிரஷாந்த்

பிரஷாந்த்

கோமல் சஹானியின் உடைகள் விஜய்யை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது. கடந்த சில ஆண்டுகளில் விஜய்க்கான சிறந்த உடைகள்.

விக்கி

விக்கி

தியேட்டருக்குள் தீபம் காட்டப்பட்டது தலைவா, துப்பாக்கி தினம்.

ரவிசங்கர்

ரவிசங்கர்

13ம் தேதி மற்றும் செவ்வாய்க்கிழமை என்றால் ராசியில்லை என்று மக்கள் நம்புகிறார்கள். ஆனால் இளையதளபதி அந்த நம்பிக்கையை உடைத்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 13ம் தேதி செவ்வாய்க்கிழமையில் ரிலீஸானது துப்பாக்கி.

கார்த்திக்

கார்த்திக்

துப்பாக்கி தினத்தன்று விஜய்யுடன் மீண்டும் சேர்ந்து பணியாற்றப் போவதாக முருகதாஸ் அறிவித்துள்ளார். மிகவும் மகிழ்ச்சி.

English summary
Thuppakki had hit the screens last Diwali. Exactly, a year ago, the Tamil movie was released and had stolen the hearts of the audience. It is now the time for Vijay's fans to remember the film and recall the memories associated with it. They are celebrating 'Thuppakki Day' on Twitter. They are posting message with the hash tag - #ThuppakkiDay.
Please Wait while comments are loading...