Don't Miss!
- Finance
Langya virus: இந்தியர்களும், இந்திய முதலீட்டாளர்களும் பயப்பட வேண்டுமா..?
- Sports
என்ன கொடுமை சார் இது ? நியூசி வீரர் டிரெண்ட் பவுல்ட் எடுத்த வினோத முடிவு..கிரிக்கெட் உலகிற்கு சோகம்
- News
அடடே .. பீகாரில் இனி நிலையான அரசு தொடரும்... நிதிஷ்குமாரை ஓஹோவென பாராட்டிய பிரசாந்த் கிஷோர்!
- Lifestyle
நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்... இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்!
- Technology
Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
Beast FDFS: பாலாபிஷேகம், பட்டாசு என திருவிழா கோலத்தில் களைகட்டிய தியேட்டர்கள்.. வெளியானது பீஸ்ட்!
சென்னை: மாஸ்டர் படம் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான நிலையில், இந்த சம்மரை சிறப்பாக்க ஏப்ரல் 13ம் தேதியான இன்று உலகம் முழுவதும் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வெளியாகி உள்ளது.

அதிகாலை 4 மணிக்கு சென்னை உள்ளிட்ட பல இடங்களில் பீஸ்ட் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் பிரம்மாண்ட கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது, பட்டாசு வெடித்து தியேட்டரை தெறிக்க விடுவது மற்றும் டிஜே போட்டு அமர்க்களப்படுத்துவது என தியேட்டர்கள் முழுக்கவே திருவிழா கோலத்தில் காட்சியளிக்கிறது.
மனப்பாடம் பண்ணத ஒப்பிச்சுட்டு போயிடுறேன்.. பிரஸ் மீட்டில் அப்படி பேசிய பீஸ்ட் இயக்குநர்!
|
பீஸ்ட் FDFS கொண்டாட்டம்
தளபதி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியானது. சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கம், வெற்றி திரையரங்கம், காசி திரையரங்கம் உள்ளிட்ட பல திரையரங்குகளில் அதிகாலை காட்சிகள் ஆரம்பமாகி உள்ளன. பீஸ்ட் படத்தை காண குவிந்த ரசிகர்களின் FDFS கொண்டாட்டங்கள் சமூக வலைதளங்களில் #BeastFDFS என டிரெண்டாகி வருகிறது.
|
பீஸ்ட் படக்குழு
சென்னை குரோம்பேட்டில் உள்ள வெற்றி தியேட்டரில் பீஸ்ட் படத்தின் FDFS காட்சியை இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத், நாயகி பூஜா ஹெக்டே உள்ளிட்ட படக்குழுவினர் அதிகாலை 4 மணி காட்சியை கண்டு ரசிக்கின்றனர். ரசிகர்களுடன் முதல் நாள் முதல் ஷோவை பார்க்கும் அனுபவம் வேற லெவலில் வெற்றி தியேட்டரில் அரங்கேறி உள்ளது.
|
ஸ்டார்ட்டட்
பீஸ்ட் படத்தின் இன்ட்ரோ காட்சியை செல்ஃபி எடுத்து ரசிகர்கள் படம் ஸ்டார்ட் ஆகிடுச்சு என சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளனர். நடிகர் விஜய் குழந்தை ஒன்றின் பலூனை காப்பாற்றிக் கொடுத்து அறிமுகம் ஆவது போல முதல் காட்சி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
|
ரோகிணியில் ரூபிக் க்யூப்
சென்னை ரசிகர்களின் கோட்டை என அழைக்கப்படும் ரோகிணி திரையரங்கில் பீஸ்ட் திரைப்படத்தை முன்னிட்டு 955 ரூபிக் க்யூப்களால் உருவான நடிகர் விஜய்யின் பீஸ்ட் மொசைக் ஆர்ட்டை அரங்கத்தினுள் வைத்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் வாய் பிளக்க வைத்துள்ளனர்.
|
பட்டாசு வெடிக்க
பீஸ்ட் திரைப்படத்தின் FDFS திருவிழா பட்டாசு வெடித்து பட்டையைக் கிளப்புகிறது. விஜய் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் பீஸ்ட் படத்தை திரையர்ங்குகளில் பார்த்து வருகின்றனர். மாஸ்டர் படத்தை தொடர்ந்து ஓராண்டுக்கு மேல் ஆன நிலையில், பீஸ்ட் படம் வெளியாகி உள்ளதால் தியேட்டரில் ரசிகர்கள் அதிகளவில் குவிந்துள்ளனர்.
|
நள்ளிரவு முதல்
அதிகாலை 4 மணிக்கு பீஸ்ட் படத்தின் முதல் காட்சி வெளியான நிலையில், ரசிகர்கள் நள்ளிரவு முதலே தியேட்டருக்கு முன் குவிந்து FDFS கொண்டாட்டத்தை அரங்கேற்றினர். அப்போது, ரசிகர்கள் பலர் மொபைல் ஃபிளாஷ் அடித்து அந்த இடத்தையே ஒளி வெள்ளத்தில் ஆழ்த்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.