»   »  "குட்டி பகவதி" பிறந்த நாள்.. கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்!

"குட்டி பகவதி" பிறந்த நாள்.. கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயின் ரசிகர்களுக்கு சமூக வலைதளங்களில் கொண்டாட எப்படித்தான் செய்திகள் கிடைக்கிறதோ தெரியவில்லை, தினம் தினம் ஒரு கொண்டாட்டத்தை உருவாக்கி தாங்களும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்வித்து வருகின்றனர்.

ஆகஸ்ட் 20 ம் தேதி புலி டிரெய்லரை கொண்டாடி மகிழ்ந்தனர், 23 ம் தேதி புலி 30 லட்சம் பார்வைகளை நெருங்கியதை கொண்டாடினர். நேற்று ஊரே கேப்டனின் பிறந்தநாளைக் கொண்டாட பதிலுக்கு தளபதியின் திருமண நாளை கொண்டாடினர்.

இன்று கொண்டாட எதுவும் இல்லையே என்று யோசித்தவர்கள் #happybirthdaysanjayvijay என்னும் ஹெஷ்டேக்கை உருவாக்கி, விஜயின் மகன் சஞ்சயின் பிறந்த நாளை சமூக வலைதளங்களில் சீரும் சிறப்புமாகத் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

15 வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் சஞ்சயை வாழ்த்திய, அன்பு உள்ளங்களின் ட்வீட்களில் இருந்து சிலவற்றை இங்கே பார்ப்போம்...

புலி பெத்த புள்ள

வங்கக் கடல் எல்ல, இது புலி பெத்த புள்ள என்று வேட்டைக்காரன் படத்தில் சஞ்சய் நடந்து வரும் புகைப்படத்தைப் போட்டு ரைமிங்காக சஞ்சயை வாழ்த்தியிருக்கிறார் கவிஞன் மோக்கியா. கவித, கவித

வாழ்க பல்லாண்டு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சஞ்சய் நீ பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்தியிருக்கிறார் ஹசில் லோயல்டி ரெஸ்பெக்ட்(விசுவாசம் மரியாதையை தள்ளிவிடு) என்ற வித்தியாசமான பெயரை வைத்திருக்கும் ரசிகர். பேரு சூப்பர்

சஞ்சய் சிறுவயது புகைப்படம்

சஞ்சயின் பிறந்தநாளில் விஜய் சஞ்சய்க்கு கேக் ஊட்டுவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு நீண்ட நாட்கள் வாழ்க என்று சஞ்சயை ஆசிர்வதித்திருக்கிறார் மோனிஷா.

தளபதி தமயன்

தளபதியின் தமயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று சஞ்சயை வாழ்த்தியிருக்கிறார் லக்ஷ்மன்.

அண்ணன் - தம்பி

அண்ணன் இல்லா தங்கைக்கெல்லாம் அண்ணன் போலவும், தம்பி இல்லா அண்ணனுக்கெல்லாம் குட்டி தம்பியாகவும் நீ வாழ வேண்டும் என்று சஞ்சயை வாழ்த்தியிருக்கிறார் இளையதளபதியன்.

குட்டி தளபதி

சங்கீதா மற்றும் விஜயின் ஆரம்ப எழுத்துகளில் இருந்து தான் சஞ்சய் என்ற பெயர் உருவானதை விளக்கி, ( என்ன ஒரு கண்டுபிடிப்பு), இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டி தளபதி என்று சஞ்சயை வாழ்த்தியிருக்கிறார் சுரேஷ்.

ஒரு நாயகன் உதயமாகிறான்..........

English summary
Today Vijay Fans Celebrating, His Son Birthday in Social Medias.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil