Don't Miss!
- News
ஆரம்பிக்கலாங்களா..நாயகன் மீண்டும் வர்றார்! லைவில் நித்தியானந்தா? உற்சாக பக்தாள்ஸ்! எப்போ தெரியுமா?
- Sports
வாக்கிங் சென்ற நடு ஸ்டம்ப்.. உம்ரான் மாலிக் ஆக்ரோஷ பவுலிங்.. தடுமாறிய இங்கிலாந்து அணி.. வீடியோ
- Technology
7GB RAM, 50MP கேமரா.. இந்த கம்பெனி கிட்ட இருந்து இப்படி ஒரு Phone-ஆ!
- Finance
பிளாஸ்டிக் தடை எதிரொலி... அமேசான் - டாடா மோட்டார்ஸ் வேற லெவல் ஒப்பந்தம்!
- Automobiles
விநோத தோற்றத்தில் சுற்றி திரிந்த ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வியந்து வேடிக்கை பார்த்த பெங்களூர் வாசிகள்!
- Lifestyle
தவா மஸ்ரூம்
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
‘தளபதி 67’ வெறித்தனமான ஆக்ஷன் படமா இருக்கும்..அறிவிப்பு வரல..லோகேஷ் பேட்டி மட்டும் கொடுக்கிறார்
சென்னை : நடிகர் விஜய் தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் 3 லுக்குகள் விஜய் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன.
இதையடுத்து தளபதி 67 படத்தில் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணையவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பும் நேற்றைய தினம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை.
நாக சைதன்யாவை புகழ்ந்த நடிகை.. ஏற்கனவே பல பிரச்சனை.. இதுல இது வேறயா ?

தளபதி 66 படம்
நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 66 படத்தின் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் இணைந்து நடித்து வருகிறார். சென்னையில் பூஜை போடப்பட்டு இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில் ஐதராபாத்தில் சில தினங்கள் தொடர்ந்து சூட்டிங் நடத்தப்பட்டன.

சென்னையில் சூட்டிங்
இந்நிலையில் பெப்சி தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு வேலை தரும் வகையில் சென்னையில் இந்தப் படத்தின் சூட்டிங் மாற்றப்பட்டது. தொடர்ந்து சென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. படத்தில் சரத்குமார், ஷாம், பிரபு, ஜெயசுதா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

தளபதி 66 பட டைட்டில்
படத்தின் டைட்டிலை வெளியிடாமல் சூட்டிங் நடத்தப்பட்டு வந்த நிலையில் விஜய் பிறந்த
நாளையொட்டி தற்போது படத்தின் டைட்டில் மற்றும் 3 லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. பீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனங்களால் நொந்துப் போயிருந்த விஜய் ரசிகர்களுக்கு இந்த போஸ்டர்கள் உற்சாகத்தை அளித்துள்ளன.

வாரிசு டைட்டில்
படத்தின் டைட்டில் வாரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இரண்டு போஸ்டர்கள் ரஜினியின் முந்தைய படங்களை நினைவுப் படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ள சூழலில் படத்தின் போஸ்டர்கள் மிகவும் மாஸாக அமைய காரணம் என்ன என்பது குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தளபதி 67 படம்
விஜய்யின் அடுத்தப்படமான தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளது உறுதியான நிலையில், நேற்றைய தினம் விஜய்யின் பிறந்தநாளில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகாதது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

வெறித்தனமான ஆக்ஷன் படம்
ஆனால் அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் இதுகுறித்து தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அப்டேட் வெளியிட்டவண்ணம் உள்ளார். ஊரறிந்த ரகசியமாக இந்த தகவல் காணப்படுகிறது. இந்நிலையில் படம் வெறித்தனமான ஆக்ஷன் படமாக இருக்கும் என்று சமீபத்திய பேட்டியில் லோகேஷ் தெரிவித்துள்ளார்.

விரைவில் அறிவிப்பு
படத்தின் அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் தற்போது விஜய்க்காக தான் எழுதிய கதையை மீண்டும் எடுத்து சிறப்பாக்கி வருகிறாராம் லோகேஷ். இந்தக் கதையை விஜய்யை மனதில் வைத்து அவர் மாநகரம் வெளியீட்டின்போதே உருவாக்கியதாக கூறப்பட்டுள்ளது. தற்போது சூட்டிங்கிற்கு முன்னதாக முன் தயாரிப்புப் பணிகளில் லோகேஷ் ஈடுபட்டு வருகிறார்.

அடுத்தடுத்த அப்டேட்கள்
படம் அக்டோபரில் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். படம் குறித்த அறிவிப்பிற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு லோகேஷ் கொடுத்துவரும் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் உற்சாகத்தை அளித்து வருகின்றன.