Don't Miss!
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- News
"பாஜக போட்டியிட்டால் நீங்களும் வாபஸா?".. செய்தியாளர் கேட்டதும் ஜெயக்குமார் தந்த பதிலை பாருங்க
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விஜய் ஏன் அந்த ரசிகையின் கையை பிடித்தார்?: பதில் தெரிஞ்சிடுச்சு
Recommended Video

சென்னை: விஜய் இளம் ரசிகை ஒருவரின் கையை பிடித்திருப்பதை பார்த்து சிலர் அவர் என்ன இப்படி செய்கிறார் என்றார்கள்.
தளபதி விஜய் கேரளாவை சேர்ந்த இளம் ரசிகை ஒருவரின் தோளில் கையை போட்டு, அவரின் கையை பிடித்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கிறார்.
அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.

ஏன் இப்படி?
விஜய் ஏன் ஒரு பெண்ணின் கையை பிடித்துக் கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். ரசிகை என்றால் இப்படியா செய்ய வேண்டும் என்று சிலர் விமர்சிக்கத் துவங்கிவிட்டார்கள்.

புகைப்படம்
வழக்கமாக எட்டி இருக்கும் விஜய் ஏன் அந்த ரசிகையின் கையை பிடித்தார் என்பது தெரிந்துவிட்டது. உங்கை கையை தொடலாமா விஜய் அண்ணா என்று அந்த ரசிகை கேட்டதால் அவர் சரி என்று கூறியுள்ளார். மற்றபடி எதுவும் கிடையாது.

வைரல்
விஜய்யுடன் புகைப்படத்தில் இருக்கும் ரசிகையின் பெயர் சரண்யா விசாக். அவர் விஜய்யை சந்தித்த பிறகு ஃபேஸ்புக்கில் போட்ட போஸ்ட் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ரசிகர்கள்
கடந்த வாரம் சென்னையில் வைத்து விஜய் கேரளாவை சேர்ந்த ரசிகர்கள், ரசிகைககளை சந்தித்தார். அந்த சந்திப்பில் சரண்யாவும் கலந்து கொண்டு புகைப்படம் எடுத்துள்ளார்.
மகிழ்ச்சி
விஜய் அண்ணாவின் முகம் என் மனதில் பதிந்துள்ளது. அவரை பார்க்கவோ, பேசவோ முடியாது என்று நினைத்தேன். எனக்கு எல்லோரையும் விட விஜய் அண்ணனை தான் மிகவும் பிடிக்கும். விஜய் அண்ணா மீது நான் வைத்திருக்கும் பாசத்தை பார்த்து பலரும் என்னை கிண்டல் செய்தது உண்டு. நான் விஜய் அண்ணாவை பார்க்கவே முடியாது என்றார்கள். இதோ பார்த்துவிட்டேன். அவரை பார்த்ததும் மகிழ்ச்சியில் உறைந்துவிட்டேன். பின்னர் உங்கள் கையை தொடலாமா என்று கேட்டேன். அவரும் சிரித்தபடியே கை கொடுத்தார், கேமராவுக்கு போஸ் கொடுக்குமாறு கூறினார். அவருக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து கூற ரொம்ப நன்றிமா கண்டிப்பா சாப்பிட்டுப் போங்க என்றார். என் கனவு நிறைவேறிவிட்டதே என சரண்யா ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.