»   »  தலைவர் வந்தாச்சு, நீங்களும் வாங்கண்ணா: இது தளபதி ரசிகர்களின் கோரிக்கை

தலைவர் வந்தாச்சு, நீங்களும் வாங்கண்ணா: இது தளபதி ரசிகர்களின் கோரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைவர் வந்துட்டார், நீங்களும் வாங்கண்ணா என்று தளபதி ரசிகர்கள் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியலுக்கு வருகிறேன், தனிக்கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறேன் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த விஜய் ரசிகர்கள் ஏக்கம் அடைந்துள்ளனர்.

விஜய்

விஜய்

ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பை வெளியிட்டுவிட்டார், கையோடு நீங்களும் அறிவிப்பு வெளியிடுங்கண்ணா என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இளைஞர்கள்

இளைஞர்கள்

ரஜினிக்கு 68 வயதாகிறது. அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிடும்போது 71 வயதாகிவிடும். தமிழகத்தை இளைஞர்கள் ஆட்சி செய்ய வேண்டும். அதனால் அரசியலுக்கு வாங்கண்ணா என்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.

சீக்கிரம்

சீக்கிரம்

அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவிக்க ரஜினிக்கு 21 ஆண்டுகள் ஆனது. நீங்கள் அத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொள்ளாதீங்கண்ணா. சீக்கிரமாக நல்ல முடிவு எடுங்கள் என்று விஜய் ரசிகர்கள் ட்வீட்டுகிறார்கள்.

அரசியல்

ரஜினி அரசியலுக்கு செல்வதால் அடுத்த சூப்பர் ஸ்டார் எங்களின் தளபதியே என்கிறார்கள் விஜய் ரசிகர்கள். ரஜினியை ஆதரித்தும், கலாய்த்தும் ட்வீட்டி வருகிறார்கள்.

English summary
Vijay fans have requested their Thalapathy to announce about his political stance soon. They want Vijay to enter politics and to rule Tamil Nadu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X