»   »  அஜீத்தின் ஆரம்பம் ஹிட்டாக வாழ்த்தி மதுரையில் 'பேனர்' வைத்த விஜய் ரசிகர்கள்

அஜீத்தின் ஆரம்பம் ஹிட்டாக வாழ்த்தி மதுரையில் 'பேனர்' வைத்த விஜய் ரசிகர்கள்

By Siva
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தின் ஆரம்பம் படம் வெற்றி பெற வாழ்த்தி விஜய் ரசிகர்கள் மதுரையில் பேனர் வைத்துள்ளனர்.

அஜீத் குமாரும், விஜய்யும் நண்பர்களான பிறகு அவரது ரசிகர்களும் நண்பேன்டா ஆகிவிட்டனர். இந்நிலையில் அஜீத்தின் ஆரம்பம் படம் வெற்றி பெற வாழ்த்தி மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர்.

இந்த பேனர் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த பேனரில் அஜீத்துக்கு விஜய் வாட்ச் கட்டிவிடுவது போன்ற புகைப்படம் உள்ளது.

இணையதளத்தில்

இணையதளத்தில்

இணையதளத்தில் இந்த பேனர் போடப்பட்டவுடன் அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் அதை சமூக வலைதளங்களில் தீயா பரப்பி வருகின்றனர்.

விஜய் ரசிகர்

விஜய் ரசிகர்

பேனர் குறித்து விஜய் ரசிகரான ஷங்கர்(எங்க ஷங்கர் இல்லப்பா) என்பவர் கூறுகையில், அஜீத் குமார் விஜய்யின் எதிரி என்று சிலர் நினைத்தாலும் நாங்கள் எப்பொழுதுமே அவர் மீது மரியாதை வைத்துள்ளோம். அஜீத்தையும், அவரது படங்களையும் நாங்கள் ஆதரித்து வருகிறோம். ஆரம்பம் படம் திரையுலகில் புதிய ஆரம்பமாக இருக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

அஜீத் ரசிகர் மன்றம்

அஜீத் ரசிகர் மன்றம்

விஜய் ரசிகர்கள் ஆரம்பம் படத்தை ஆதரித்து வைத்துள்ள பேனரை பார்த்த அஜீத் ரசிகர் மன்றத்தினர் உருகிவிட்டனர். இதையடுத்து அவர்கள் விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

31ம் தேதி ரிலீஸ்

31ம் தேதி ரிலீஸ்

ஆரம்பம் படம் வரும் 31ம் தேதி ரிலீஸாகிறது. தமிழகத்தில் ரிலீஸாவதற்கு முந்தைய நாள் வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது. ஆரம்பம் படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Illayathalapathy's followers have supported and wished good luck for Thala's forthcoming movie Arrambam. In an exciting development, Vijay's fans in Madurai have lent their support for Arrambam. They have expressed happiness over the release and wished Ajith Kumar to deliver a massive hit with the forthcoming Tamil movie. A banner on the same is seen in the city where the photo of Illayathalapathy tying a watch to Thala (The picture taken during the shooting of Mankatha-Velayudham) has driven the people's attention.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more