அதே வெள்ளை சட்டை.. குனிந்த தலை.. பீஸ்ட் போஸ்டர் காப்பியா துணிவு செகண்ட் லுக்? ரசிகர்கள் கலாய்!

சென்னை: எந்த படத்தின் போஸ்டர்கள் வெளியானாலும் அது காப்பியா? என்று தேடுவதிலேயே நெட்டிசன்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

ரசிகர்கள் சண்டை தான் இதற்கு முக்கிய காரணமே. ஒரு நடிகரின் படத்தை அவர்களது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், மற்ற ரசிகர்கள் ட்ரோல் செய்வதும், அந்த ரசிகர்களின் நாயகரின் படம் வெளியாகும் போது திருப்பி செய்வதுமாகவே இருக்கிறது.

அஜித்தின் துணிவு ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் காப்பி என ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், தற்போது படு மாஸாக வெளியாகி உள்ள செகண்ட் லுக் போஸ்டரும் விஜய்யின் பீஸ்ட் படத்தின் போஸ்டரின் காப்பி என ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

டிரெண்டிங்கில் அஜித்

டிரெண்டிங்கில் அஜித்

துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாவதற்கு முன்பாகவே அஜித் ரசிகர்களை சோஷியல் மீடியாவில் ஒருங்கிணைக்க பைக் டூர் சென்ற போட்டோக்களை வெளியிட்டு படக்குழுவினர் தொடர்ந்து நடிகர் அஜித்தை சோஷியல் மீடியா டிரெண்டிங்கிலேயே வைத்திருந்தனர். அஜித் கோயிலுக்கு செல்லும் புகைப்படம், ரசிகர்களுடன் கலந்துரையாடும் வீடியோக்கள் என அனைத்தும் வெளியாகி ஆர்வத்தை அதிகரித்தது.

எதிர்பார்ப்பை எகிற வைத்து

எதிர்பார்ப்பை எகிற வைத்து

தொடர்ந்து அஜித் தரிசனத்தை காட்டி வந்த நிலையில், அவர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நேரத்தில் சரியாக ஃபர்ஸ்ட் லுக்கை இறக்கி ஏகப்பட்ட சாதனைகளை துணிவு படத்தின் படக்குழு செய்து வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி மிரட்டி வந்த நிலையில், அடுத்ததாக அட்டகாசமான செகண்ட் லுக்கையும் படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

ட்ரோல் பிரச்சனை

ட்ரோல் பிரச்சனை

அஜித், விஜய், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் வந்தாலே அந்த படங்களின் போஸ்டர்கள் காப்பி என்று ட்ரோல் செய்யப்படுவது வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் காப்பி சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது வெளியான செகண்ட் லுக்கையும் விஜய் ரசிகர்கள் சும்மா விடவில்லை.

பீஸ்ட் லுக் காப்பி

பீஸ்ட் லுக் காப்பி

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரில் நடிகர் விஜய் வெள்ளை சட்டை அணிந்து கொண்டு கீழே பார்ப்பது போன்ற போஸ்டர் இடம்பெற்றிருக்கும். அதே மாதிரியான போஸ் கொடுக்க வைத்து நடிகர் அஜித்துடன் நடத்திய போட்டோஷூட்டை 2வது லுக்காக வெளியிட்டுள்ளனர் என விஜய் ரசிகர்கள் ட்ரோல்ச் எய்து வருகின்றனர்.

ரொம்ப மோசம்

ரொம்ப மோசம்

பீஸ்ட் படத்தின் இன்னொரு போஸ்ட்டரையும் போட்டு, அப்படியே காப்பியடிச்சி வச்சிருக்கானுங்களே ரொம்ப மோசம் என விஜய் ரசிகர்கள் தொடர்ந்து அஜித் ரசிகர்களை ட்ரோல் செய்து வருகின்றனர். வாரிசு போஸ்டருக்கு அதிக லைக் வந்ததா? இல்லை துணிவு போஸ்டருக்கு அதிக லைக் வந்ததா என்கிற ரெக்கார்டு சண்டை வேறு ஓடிக் கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X