Don't Miss!
- News
தினசரி ரூ.2000, மாதம் ரூ.62,500 சம்பாதித்தால் வரி இல்லை.. பட்ஜெட்டில் சொன்ன முக்கிய விஷயமே இதுதான்!
- Finance
1 அல்ல 2 இல்ல.. 35000 கோடி..! பட்ஜெட் 2023 அறிவிப்பால் கஜானாவில் ஓட்டை.. எந்த அறிவிப்பு..?!
- Automobiles
நேபாளத்தில் நம்ம ஊர் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்!! விலைகளை மட்டும் பார்த்துடாதீங்க... இங்கு எவ்வளவோ பரவாயில்லை
- Technology
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- Lifestyle
கேந்திர திரிகோண ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் அமோக வெற்றி கிடைக்க போகுது..
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நல்லா ல.. நல்லா ல.. நல்லா ல.. துணிவு ‘காசேதான் கடவுளடா’ பாடலை வச்சு செய்யும் விஜய் ரசிகர்கள்!
சென்னை: துணிவு படத்தின் செகண்ட் சிங்கிளான "காசேதான் கடவுளடா" பாடலில் வரும் தல்லா ல.. தல்லா லா.. தல்லா லலா.. வரிகளை அப்படி கொஞ்சம் மாற்றிப் போட்டு நல்லா ல.. நல்லா ல.. நல்லா ல.. என விஜய் ரசிகர்கள் பங்கமாக ஓட்டி வருகின்றனர்.
போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு திரைப்படம் வரும் பொங்கல் 2023க்கு வெளியாகிறது.
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் துணிவு படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.
வாரிசுக்கு தான் அதிக தியேட்டர்ஸ்... ரசிகர்கள் நினைத்தது வேறு, நடந்தது வேறு: அப்போ அஜித்தின் துணிவு?

யாரு நம்பர் ஒன்
வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தமிழ்நாட்டில் நடிகர் அஜித்தை விட விஜய் தான் நம்பர் ஒன் நடிகர் என பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஏகப்பட்ட மீடியாக்களில் கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்ட நிலையில், அதிகபட்சமான ரசிகர்களின் ஓட்டுக்கள் நடிகர் விஜய்க்கும் அதற்கு அடுத்தபடியாக நடிகர் அஜித்துக்கும் குவிந்தது. சில மீடியா ரிப்போர்ட்களில் அஜித் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். வரும் பொங்கல் ரேஸில் யாரு பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றும் யாரு தமிழ்நாட்டில் நம்பர் ஒன் என்பதும் தெரிந்து விடும் என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

துணிவு செகண்ட் சிங்கிள்
இந்த சர்ச்சைகள் ஒரு பக்கம் சோஷியல் மீடியாவில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது அஜித் ரசிகர்களை குஷிப்படுத்த துணிவு படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான காசேதான் கடவுளடா பாடல் வெளியாகி உள்ளது. பல ஆயிரம் கோடியில் வெளியான அவதார் 2 படத்தையே லேக் அடிக்குது என விமர்சித்து வரும் ரசிகர்கள் இந்த பாடலை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

தேவையில்லாத டிவைடர்
ஜியோமெட்ரி பாக்ஸில் டிவைடர் எதுக்கு இருக்குன்னே பசங்களுக்கு தெரியாதது? போல இந்த பாடலில் அப்படி தனித்துவமாக ஒரு வரி கூட மஞ்சு வாரியர் பாடவில்லையே.. வெறும் ப்ரமோஷனுக்காக அவரை பயன்படுத்தி உள்ளனர் என்றும் தேவையில்லாத டிவைடர் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

நல்லா ல.. நல்லா ல..
அஜித் மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகி உள்ள துணிவு படத்தின் செகண்ட் சிங்கிளான "காசேதான் கடவுளடா" பாடலில் வரும் தல்லா ல.. தல்லா லா.. தல்லா லலா.. வரிகளை அப்படி ஆல்டர் பண்ணி நல்லா ல.. நல்லா ல.. நல்லா ல.. என விஜய் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

பாவனி, அமீர் ஆடுறாங்க
சில்லா சில்லா பாடலை தொடர்ந்து இந்த செகண்ட் சிங்கிள் பாடலிலும் பிக் பாஸ் பிரபலங்களான பாவனி மற்றும் அமீர் டான்ஸ் ஆடுறாங்க.. படம் முழுவதும் அஜித்தின் கொள்ளை கூட்ட கேங்கில் இவங்க தான் இருக்க போறாங்களா? லைட்டா பயமா இருக்கே என ரசிகர்கள் புலம்புவதும் ஹெவியாக கேட்டு வருகிறது.

அஜித் தி பாஸ்
விஜய் ரசிகர்கள் என்ன தான் ஓட்டினாலும், அஜித் ரசிகர்களுக்கு அஜித்தின் மாஸ் பிரசன்ஸ் ஒன்றே போதும், பாடல் வேறலெவலில் இருக்கு என கொண்டாடி வருகின்றனர். வாரிசு படத்தில் விஜய் பாஸ் என வருகிறார். இந்த பாடலில் அஜித் பாஸ் என ஆடுகிறார். இருவரது போட்டியும் பொங்கலுக்கு எப்படி இருக்கப் போகிறது என ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட்டிங்.