»   »  மெர்சல் தான் நமக்கு பாகுபலி! - அடாத மழையிலும் விடாமல் பார்க்கும் ரசிகர்கள்

மெர்சல் தான் நமக்கு பாகுபலி! - அடாத மழையிலும் விடாமல் பார்க்கும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அடைமழைக்கு மத்தியிலும் 'மெர்சல்' படம் பார்க்க தியேட்டரில் ரசிகர்கள் குவிந்திருக்கிறார்கள் என போரூர் ஜி.கே தியேட்டர் உரிமையாளர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

'மெர்சல்' படத்திற்கு நேற்று 13-வது நாள், அதுவும் வழக்கமாகவே கூட்டம் குறைவாக இருக்கும் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை. கடும் மழையிலும் தியேட்டருக்கு வந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியோடு ட்வீட் செய்திருக்கிறார் தியேட்டர் உரிமையாளர்.

Vijay fans watching mersal even these rainy days

சென்னை போரூரில் உள்ள ஜி.கே தியேட்டரின் உரிமையாளர், 'மழை நாளிலும் ரசிகர்கள் நிரம்பியிருக்கும் மெர்சலை கோலிவுட்டின் பாகுபலி என அழைக்கலாமா?' எனக் கேட்டுள்ளார்.

இந்த அடை மழையிலும் 90% தியேட்டர் நிரம்பியிருந்தது என அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். மெர்சல் படம் தொடர்ந்து குடும்பம் குடும்பமாகப் பார்க்க, வெற்றிகரமாக ஓடிவருவது குறிப்பிடத்தக்கது.

English summary
The director of the GK Cinemas said that fans are gathered in the theater to watch 'Mersal' during even this rainy day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil