»   »  பிறந்த நாளன்று குடும்பத்துடன் அமெரிக்கா பறந்த விஜய்!

பிறந்த நாளன்று குடும்பத்துடன் அமெரிக்கா பறந்த விஜய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது பிறந்த நாளான இன்று குடும்பத்துடன் அமெரிக்காவுக்குப் பறக்கிறார் நடிகர் விஜய். அங்கு 15 நாட்கள் ஓய்வெடுத்த பிறகு சென்னை திரும்புகிறார்.

விஜய்க்கு இன்று பிறந்த நாள். ஆண்டும் விஜய் தன்னுடைய பிறந்த நாளில் சென்னையில் கொண்டாடுவார்.

அதுபோல் ரசிகர்களை சந்தித்தும், பல நலத்திட்ட உதவிகளை நேரடியாக செய்வதையும் கடந்த சில வருடங்களாகவே விஜய் தொடர்ந்து கொண்டிருந்தார்.

கேக் வெட்டி...

கேக் வெட்டி...

ஆனால் இந்தப் பிறந்த நாளை அவர் தனது 60 வது பட ஷூட்டிங்கில் கொண்டாடியதாக செய்திகள் வெளியாகின.

அமெரிக்காவுக்கு

அமெரிக்காவுக்கு

இந்நிலையில், பிறந்த நாளான இன்று தன் குடும்பத்துடன் அமெரிக்கா புறப்பட்டார் விஜய். நாளை அங்கு சேர்ந்துவிடுவார். அமெரிக்க நேரப்படி அங்கு நாளைதான் ஜூன் 22. எனவே அங்கு குடும்பத்துடன் மட்டும் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடப் போகிறார்.

15 நாட்கள்

15 நாட்கள்

அமெரிக்காவில் 15 நாட்கள் குடும்பத்துடன் ஓய்வெடுத்து பின்னர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ‘விஜய் 60' படத்தின் படப்பிடிப்புக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உதவிகள்

உதவிகள்

விஜய் ஊரிலில்லாவிட்டாலும் அவர் பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது.

English summary
Vijay has flew to the US with his family on his birthday for 15 days vacation.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil