நெப்போலியனை மட்டுமா?.. இன்னொரு சீனியர் நடிகரையும் அசிங்கப்படுத்திய விஜய்?.. ஃபேமிலிய அப்படி சொன்னாராம்

சென்னை: விஜய்க்கென்று தமிழ்நாட்டில் ஏகப்பட்ட பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவரை பார்த்துவிடமாட்டோமா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்த ஏக்கம்தான் கரூரில் 41 பேரை காவு வாங்கியது குறிப்பிடத்தக்கது. அந்த சம்பவம் விஜய்க்கு மிகப்பெரிய கரும்புள்ளியை உண்டு செய்திருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களை இன்னமும் அவர் நேரில் சென்று சந்திக்காததும் பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது.

விஜய் நடிப்பில் கடைசியாக GOAT திரைப்படம் வெளியானது. அப்பட சமயத்திலேயே தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கி முதல் மாநாட்டில் திமுகவை கடுமையாக எதிர்த்த அவர்; தொடர்ந்து அதே பாதையில் பயணித்தார். இதனால் திமுகவினரும் தங்களால் முடிந்த பதிலடியை கொடுத்தார்கள். அதில் முக்கியமானது, 'மக்களை களத்தில் வந்து விஜய் சந்திக்கவில்லை' என்பதுதான்.

முடிவெடுத்த விஜய்: இதனையடுத்து 'உங்கள் விஜய் நா வரேன்' என்கிற பெயரில் அரசியல் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார். வாராவாரம் சனிக்கிழமைகளில் மட்டும் தொண்டர்களை சந்திப்பதாக கூறியிருந்தார். முதல் வாரத்தில் திருச்சியில் பேசிய அவர் அடுத்த வாரம் கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார். எனவே அவரை பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினார்கள்.

Vijay has insulted not only Napoleon but also senior actor Radha Ravi
Photo Credit:

41 பேர் பலி: காலை 8.45 மணிக்கு நாமக்கல், மதியம் கரூர் ஆகிய பகுதிகளில் சந்திப்பதுதான் நிகழ்ச்சி ஏற்பாடாக இருந்தது. ஆனால் சென்னையிலிருந்தே அவர் 9 மணிக்குத்தான் கிளம்பினார். அவர் அப்படி கிளம்பியதை கூடியிருந்தவர்களிடமும் கட்சியினர் ஒழுங்காக தெரியப்படுத்தவில்லை. இதனால் நேரம் ஆக ஆக கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியது. ஒருவழியாக மாலை வந்து கரூரில் விஜய் பேசினார். ஆனால் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்கள்.

விஜய் மீது விமர்சனம்: இந்த விவகாரம் பெரும் பரபரப்பை அரசியல் தளத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களை அவர் இன்னமும் நேரில் சென்று சந்திக்கவில்லை. அதேசமயம் அவர்களிடம் அவர் இன்று வீடியோ காலில் பேசியதாக ஒரு தகவலும் ஓடுகிறது. இந்த சம்பவம் எல்லாம் விஜய்யின் இமேஜுக்கு கடுமையான டேமேஜை உருவாக்கிவிட்டது என்பதுதான் உண்மை. இது ஒருபக்கம் இருக்க திரைத்துறையிலும் அவர் சீனியர் நடிகர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறார்; தலைக்கனம் பிடித்தவர் என்ற விமர்சனங்களும் எழுகின்றன.

நெப்போலியனுக்கு நடந்தது: அதற்கு உதாரணமாக நெப்போலியன் விவகாரத்தை சொல்வார்கள். அதாவது போக்கிரி பட சமயத்தில் கேரவனில் இருந்த விஜய்யை தனது நண்பர்களுடன் சந்திக்க சென்றபோது நெப்போலியனை அவர் கடுமையாக பேசி அசிங்கப்படுத்தியதாக பேச்சு உண்டு. அதனை நெப்போலியனும் சில பேட்டிகளில் உறுதிப்படுத்தியிருக்கிறார். இந்நிலையில் நடிகர் ராதாரவியின் பழைய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

ராதாரவி பேட்டி: சித்ரா லட்சுமணனுக்கு அவர் அளித்த பேட்டியில், "சர்கார் படத்தில் நானும் விஜய்யும் சேர்ந்து நடித்தோம். அதற்கு முன்னதாகவே எனது பேரன் விஜய்யின் தீவிரமான ரசிகன். எப்படியாவது அவரை நேரில் பார்க்க வேண்டும் என்று கூறினார். ஷூட்டிங்கின்போது இதுகுறித்து அவரது பி.ஏவிடம் சொன்னேன். ஆனால் விஜய் மேக்கப்பில் இருக்கும்போது ஃபோட்டோ எடுக்கமாட்டார் என்று சொல்லிவிட்டார். என்ன மேக்கப்போ தெரியவில்லை. பிறகு ஒருநாள் குடும்பத்தோடு சென்று விஜய் வீட்டில் ஃபோட்டோக்கள் எடுத்துக்கொண்டோம்.

அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் குறைந்த ரத்த அழுத்தம் வந்து மயங்கி விழுந்துவிட்டேன். விஜய் உள்ளிட்டோர் என்னை வந்து தூக்கிவிட்டார்கள். சில நாட்கள் கழித்து அதற்கு நேரில் பார்த்து நன்றி தெரிவிக்கலாம் என நினைத்து அவரது பி.ஏ.விடம் கூறினேன். அதற்கு அவர், 'சரி சார். விஜய் சார் வர சொல்லிவிட்டார். ஆனால் அன்று போல் கூட்டத்தை கூட்டி வர வேண்டாம் என கூறுகிறர்" என்றார். நான் உடனே, 'இல்லை நான் வரவில்லை' என சொல்லி வைத்துவிட்டேன். என் குடும்பத்தைத்தான் அவர் கூட்டம் என்று சொல்லியிருக்கிறார். அவருக்கு வேண்டுமானால் அது கூட்டமாக இருக்கலாம். எனக்கு அது என்னுடைய குடும்பம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X