நெகடிவிட்டி எல்லாம் தள்ளி வை பேபி.. வீட்டுக்கே கூப்பிட்டு பீஸ்ட் டீமுக்கு சக்சஸ் பார்ட்டி தந்த விஜய்
சென்னை : பீஸ்ட் படக்குழுவினருக்கு நடிகர் விஜய் சக்சஸ் பார்ட்டி கொடுத்து அசத்தி உள்ளார். இதை போட்டோவுடன் சோஷியல் மீடியாவில் பகிர்ந்த டைரக்டர் நெல்சன், மிக உருக்கமான நீண்ட பதிவு ஒன்றையும் போஸ்ட் செய்துள்ளார்.
Recommended Video
டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி உலகம் முழுவதிலும் ரிலீசானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, விடிவி கணேஷ், அபர்னாதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கலவை விமர்சனங்களை பெற்ற பீஸ்ட்
தமிழ் உள்ளிட்ட மொத்த 5 மொழிகளில் பீஸ்ட் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. 2022ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகவும், மிகப் பெரிய வசூல் சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. படத்தில் திரைக்கதை சொதப்பலாக இருந்ததாக திரைத்துறையை சேர்ந்த பலரே கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். விஜய் ரசிகர்கள் பீஸ்ட் படத்தை பார்த்து விட்டு, அப்செட் ஆனதாக சொல்லப்பட்டது.

எத்தனை கோடி வசூல் பாருங்க
ஆனால் கடந்த 11 நாட்களில் பீஸ்ட் படம் 235 கோடிகளை வசூல் செய்துள்ளது. இத்தனைக்கும் அடுத்த நாளே கேஜிஎஃப் 2 படம் ரிலீசான நிலையிலும் விஜய்யின் பீஸ்ட் படம் 200 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. தொடர்ந்து விஜய் ரசிகர்கள் பீஸ்ட் படத்தை கொண்டாடி வருகிறார்கள். விரைவில் பீஸ்ட் படத்தின் வசூல் 250 கோடிகளை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சக்சஸ் பார்ட்டி கொடுத்த விஜய்
இந்நிலையில் நடிகர் விஜய், பீஸ்ட் படத்தின் வெற்றியை கொண்டாட, படக்குழுவினருக்கு தனது வீட்டிலேயே சக்சஸ் பார்ட்டி அளித்துள்ளார். பீஸ்ட் படக்குழுவினருடன் விஜய் உணவு சாப்பிட்ட போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த டைரக்டர் நெல்சன், மிக நீண்ட உருக்கமான பதிவையும் பகிர்ந்துள்ளார். நெல்சன் பதிவிட்ட பீஸ்ட் சக்சஸ் பார்ட்டி போட்டோ சோஷியல் மீடியாவில் மிக வேகமாக பகிரப்பட்டு, செம டிரெண்டிங் ஆகி வருகிறது.

உருகி போன நெல்சன்
நெல்சன் தனது பதிவில், எங்களுக்கு இப்படி ஒரு விருந்து கொடுத்ததற்கு நன்றி விஜய் சார். இது ஜாலியான, மறக்க முடியாத மாலை பொழுதாக டீமில் உள்ள அனைவருக்கும் மாறி உள்ளது. இந்த தருணத்தில் விஜய் சாரின் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இப்படி ஒரு அனுபவம் கிடைத்ததை வாழ்நாளில் கெளரவமாக நினைக்கிறேன். இப்படி ஒரு பெரிய வாய்ப்பை கொடுத்த சன் பிக்சர்ஸ், கலாநிதி மாறன், காவ்யா மாறன் ஆகியோருக்கு நன்றி. இந்த குழு இல்லையென்றால் இது சாத்தியமில்லை. ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும் எனது நன்றி என தெரிவித்துள்ளார்.

100 ரூபாய் பிரியாணி இல்லை
இந்த சக்சஸ் பார்ட்டி போட்டோவை நெல்சன் மட்டுமல்ல படக்குழுவை சேர்ந்த பலரும் தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். இதில் சதீஷ் பகிர்ந்த பகிர்வில், இந்த அற்புதமான தருணத்திற்கு நன்றி விஜய் சார். 100 ரூபாய் பிரியாணி கிடையாது. அடுத்த ஒரு மாதத்திற்கு சாப்பிட்டு விட்டேன். இப்படி ஒரு போசை அவாய்டு பண்ணிருக்கலாம். ரொம்ப லேட்டாக தான் புரிந்தது. பீஸ்ட் நினைவுகளை தந்த இந்த போட்டோவில் உள்ள ஒவ்வொருவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

இப்போ தான் இதை சொல்லனுமா
சமீபத்தில் சன் டிவியில் நெல்சனுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பேட்டி அளித்த விஜய், தனக்கு 100 ரூபாய் பிரியாணி தான் பிடிக்கும் என குறிப்பிட்டிருந்தார். இதை குறிப்பிட்டு, இதில் விஜய்க்கு பிடித்த 100 ரூபாய் பிரியாணி இல்லை என்பதை நடிகர் சதீஷ் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











