விஜய்யின் திடீர் கோபம்… இயக்குநர் மீது கடும் அதிருப்தி… சீக்கிரம் முடியுமா வாரிசு ஷூட்டிங்?
சென்னை: விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகும் வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது.
வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், இயக்குநர் மீது விஜய் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இறுதிக்கட்டத்தில் வாரிசு
வம்ஷி பைடிபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் விஜய். ஒருநேரத்தில் ஒரு படத்தில் மட்டும் தான் நடிப்பது என விஜய் ரொம்ப தெளிவாக கால்ஷீட் கொடுத்து கமிட் ஆகி வருகிறார். வாரிசு ஷூட்டிங் முடிந்ததும் விஜய்யின் 'தளபதி 67' பற்றி அதிகாரப்பூர்வமான அப்டேட் வெளியாகும் எனத் தெரிகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிக்கவுள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போது உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

தீபாவளிக்கு வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள்
வாரிசு திரைப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு, எஸ்ஜே சூர்யா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட மேலும் பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதுவரை விஜய்யின் போஸ்டர்களை மட்டுமே படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்களை உற்சாகப்படுத்த தீபாவளிக்கு ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் மீது விஜய்க்கு கோபம்
அஜித்தின் துணிவு பொங்கலுக்கு ரிலீஸாகும் என தகவல் வெளியானது. இதனால் விஜய்யின் வாரிசு ரிலீஸ் தள்ளிப்போகும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், வாரிசு படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்ண படக்குழு தீயாக வேலை பார்த்து வருகின்றனர். சென்னை எண்ணுர் பகுதியில் கடந்த சில தினங்களாக வாரிசு ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே வாரிசு இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி மீது விஜய் கோபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதான் காரணமா
கடந்த வாரம் இயக்குநர் வம்சி உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுள்ளார், அதனால் அவரை ஒருவாரம் ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. முதலில் விஜய்யிடம் 105 நாட்களில் படத்தை முடிப்பதாக கூறி அவர் கால்ஷீட் வாங்கியுள்ளார். ஆனால் தற்போது மேலும் 40 நாட்கள் கால்ஷீட் வேண்டும் என விஜய்யிடம் கேட்டுள்ளாராம் வம்சி. இதனால் வம்சி மீது நடிகர் விஜய் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் வாரிசு ஷூட்டிங் விரைவில் முடிந்துவிடும் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











