twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய்யின் தோரணை, கெத்தை பார்த்தால் தலைவன் ரெடியாகிவிட்டான் போல

    By Siva
    |

    Recommended Video

    முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன்'... விஜய் அதிரடி வீடியோ

    சென்னை: அரசியலுக்கு வருவேன் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார் விஜய்.

    தலைவா படத்தில் இருந்து விஜய் படங்களுக்கு தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. டைம் டூ லீட் என்ற ஒரு வரிக்காக தலைவா படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டது.

    சர்கார் பட போஸ்டரில் விஜய் புகைப்பிடப்பது போன்று போஸ் கொடுத்ததால் ஆளாளுக்கு விமர்சனம் செய்தார்கள்.

    இசை வெளியீடு

    இசை வெளியீடு

    சர்கார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய்யின் நடை, பாவனையில் மாற்றம் தெரிந்தது. அவர் கெத்தாக நின்றதோடு மட்டும் அல்லாமல் பேச்சிலும் கெத்து இருந்தது. ஓவராக நெருக்கடி ஏற்பட்டு தகுதியான மனிதர்களை தானாக உள்ளே வந்து சேர்த்துவிடும். ஒருத்தன் அடிபட்டு நொந்து நூலாகி கிளம்பி வருவான். அவன் தலைவனாக மாறுவான் என்றார் விஜய். தொடர்ந்து நெருக்கடியில் இருக்கும் அவர் விரைவில் அரசியலுக்கு வருவதை தான் இப்படி பேசியுள்ளாரோ?

    கட்சி

    கட்சி

    விழாவில் அரசியல், கட்சி, தலைவன் பற்றி வெளிப்படையாக பேசினார் விஜய். அயோக்கியனால் காந்தியை பின்பற்ற முடியாது. தலைவனே படுமோசமாக இருந்துட்டான் என்றால் முடிந்தது கதை என்றார் விஜய். விஜய் இப்படி எல்லாம் பேச மாட்டாரா, அதை கேட்க மாட்டோமா என்று ஏங்கிய ரசிகர்களுக்கு நேற்று ஒரே மகிழ்ச்சி தான்.

    நிமிர்ந்துவிட்டேன்

    நிமிர்ந்துவிட்டேன்

    இனி குட்ட குட்ட குனிய மாட்டேன், நிமிர்ந்து விட்டேன் என்பது போன்று இருந்தது விஜய்யின் பேச்சும், தோரணையும். நான் முதல்வரானால் ஊழலை ஒழிப்பேன் என்று அவர் கூறிய ஒற்றை வாக்கியம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. விஜய்யை தமிழக முதல்வராகப் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு அவரின் பேச்சு நம்பிக்கையை அளித்துள்ளது.

    அமைதி

    அமைதி

    தன்னை யார் சீண்டிப் பார்த்தாலும் அமைதியாக இருந்ததற்கான காரணத்தையும் விஜய் நேற்று தெரிவித்தார். அதாவது உசுப்பேத்துறப்ப உம்முன்னும், கடுப்பேத்துறப்ப கம்முன்னும் இருந்தால் வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும். எனக்கு ஜம்முன்னு இருக்கு என்றார் அவர். நல்ல கொள்கை விஜய். நிஜத்தில் முதல்வரானால் முதல்வர் போன்று நடிக்க மாட்டேன் என்று விஜய் கூறினார். அந்த வாக்கியத்தில் உண்மை பொதிந்திருக்கிறது. எது வந்தாலும் வரட்டும் பார்த்துவிடலாம் என்ற மூடில் இருக்கிறார் அவர். ஜெயலலிதா போன்று குட்டி கதை எல்லாம் வேறு சொன்னார். நீங்க நடத்துங்க விஜய்.

    English summary
    Vijay's energetic speech at Sarkar audio launch has given a hit that he is ready to lead.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X