twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசியல் தலைவர்களை விமர்சித்தால் கடுமையான நடவடிக்கை.. நடிகர் விஜய் அதிரடி அறிக்கை.. என்ன நடந்தது?

    |

    சென்னை: விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை கிளப்பி உள்ளது.

    அரசு பதவிகளில் உள்ளோர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிக்கைகளில் இணையதளங்களில் போஸ்டர்களில் என எந்தத் தளத்திலும் எழுதவோ மீம்ஸ் உள்ளிட்ட எதனையும் பதிவிடவோ கூடாது என இயக்கத்தினரை நடிகர் விஜய் எச்சரித்துள்ளார்.

    திடீரென நடிகர் விஜய் இப்படியொரு அறிக்கை வெளியிட என்ன காரணம் என ஏகப்பட்ட யூகங்கள் கிளம்பி உள்ளன.

    நாகசைதன்யாவை மறக்காத சமந்தா.. விவாகரத்துக்கு பின் வெளியிட்ட பதிவு.. என்ன காரணமா இருக்கும்!நாகசைதன்யாவை மறக்காத சமந்தா.. விவாகரத்துக்கு பின் வெளியிட்ட பதிவு.. என்ன காரணமா இருக்கும்!

    கேவலப்படுத்தும் ரசிகர்கள்

    கேவலப்படுத்தும் ரசிகர்கள்

    ஆபாசமாக மற்ற நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை சித்தரித்து நடிகர் விஜய்யின் ரசிகர்கள் மீம்ஸ் போட்டும், சமூக வலைதளங்களில் சண்டை போட்டும் வருகின்றனர். அஜித், ரஜினி என பல முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் இதுபோன்று சமூக வலைதளங்களில் வரம்புமீறி செல்வது அந்த நடிகருக்குத் தான் ஏகப்பட்ட சிக்கல்களையும் சங்கடத்தையும் கொடுக்கும் என்பதை ரசிகர்கள் உணர்வதில்லை.

    விஜய் எச்சரிக்கை

    விஜய் எச்சரிக்கை

    அரசு பதவிகளில் உள்ளோர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிக்கைகளில் இணையதளங்களில் போஸ்டர்களில் என எந்தத் தளத்திலும் எழுதவோ மீம்ஸ் உள்ளிட்ட எதனையும் பதிவிடவோ கூடாது என இயக்கத்தினரை நடிகர் விஜய் எச்சரித்துள்ளார்.

    விஜய் மக்கள் இயக்கம்

    விஜய் மக்கள் இயக்கம்

    இது நம் தளபதி விஜய் அவர்களின் கடுமையான உத்தரவின்பேரில் ஏற்கனவே பலமுறை இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தோம். அதனை மீறுவோர் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டதோடு இயக்கத்தை விட்டு நீக்கியும் உள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    சட்டப்பூர்வ நடவடிக்கை

    சட்டப்பூர்வ நடவடிக்கை

    மேலும், நம் தளபதி விஜய் அவர்களின் அறிவுறுத்தலை மீண்டும் யாரேனும் மீறினால் இனி அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்பதை தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியப்படுத்தி கொள்கிறேன் என புஸ்ஸி ஆனந்த் இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

    என்ன பிரச்சனை

    என்ன பிரச்சனை

    சமீபத்தில் வெளியான பீஸ்ட் டிரைலரில் நடிகர் விஜய் காவி ஸ்க்ரீனை கிழிப்பது போல காட்சி இடம்பெற்றிருந்த நிலையில், அதில், பிரதமர் மோடியின் படத்தை வைத்து விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ரசிகர்கள் சிலர் எடிட் செய்திருந்தது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்கின்றனர்.

    இஸ்லாமிய அமைப்புகள் மீது

    இஸ்லாமிய அமைப்புகள் மீது

    மேலும், நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த சில இயக்கங்கள் வலியுறுத்தி வந்த நிலையில், விஜய் ரசிகர்கள் அவர்களையும் ட்ரோல் செய்து மீம்களை போட்டு திட்டித் தீர்த்தனர். இப்படி அடுத்தடுத்த பிரச்சனைகள் சமூக வலைதளங்களில் சூடு பிடித்தது தான் இந்த அறிவிப்பு காரணம் என்கின்றனர்.

    மறைமுகமாக

    மறைமுகமாக

    அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் என டைரக்டாக சொன்ன நடிகர் விஜய் சக நடிகர்களையும் விமர்சிக்கக் கூடாது குறிப்பாக நடிகர் அஜித்தை தரமற்ற முறையில் விமர்சிக்கக் கூடாது என நேரடியாக சொல்லாமல் "யாரையும்" என மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கிறார். விஜய் மக்கள் இயக்கத்தினர் அல்லது விஜய் ரசிகர்கள் இனியும் வரம்பு மீறி சென்று அதன் மூலம் விஜய்க்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும் என எச்சரிக்க அதுதான் காரணம் என்கின்றனர்.

    முதலமைச்சருடன் சந்திப்பு

    முதலமைச்சருடன் சந்திப்பு

    தளபதி 66 பட பூஜையை முடித்த கையோடு கல்பாத்தி அகோரம் மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்தில் கலந்து கொண்டார் நடிகர் விஜய். அந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் பரஸ்பரம் சந்தித்துக் கொண்டு பேசியதை தொடர்ந்து இப்படியொரு அறிக்கை வெளியாகி உள்ள நிலையில், வேறு மாதிரியான யூகங்களும் கிளம்பி உள்ளன.

    English summary
    Actor Vijay issues a stern warning to his Vijay Makkal Iyakkam after some of them troll and abuse political party leaders over the Beast controversy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X