இளச்சு போய்.. பைத்தியக்காரர் மாதிரி இருந்தாரு விஜய்.. கோடி கொடுத்தாலும்.. மகனை இழந்த தந்தை உருக்கம்
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தவெக தலைவர் விஜய்யிடம் ஆறுதல் பெறும் நிகழ்வு நேற்று சென்னையில் நடந்தது. தனி தனி ரூம்களில் அவர்களை சந்தித்த விஜய் மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்றைய நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு மனம் திறந்து ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார்.
அரசியல் சுற்று பயணத்தை ஆரம்பித்த விஜய் கடந்த மாதம் கரூருக்கு சென்றார். குறிப்பிட்ட நேரத்தைவிடவும் ரொம்பவே தாமதமாக சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த நெரிசலில் சிக்கி பரிதாபமாக 41 பேர் உயிரிழந்தார்கள். அந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவத்துக்கு விஜய்தான் முழு பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பலரும் கூறினார்கள். ஆனால் அவர் நேரில் சென்றுகூட சந்திக்கவில்லை.
ஆறுதல் பெறும் நிகழ்வு: அவர் எப்போதுதான் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திப்பார் என்பதுதான் பெரிய கேள்வியாக இருந்தது. இப்போ, அப்போ என்று தவெகவினர் கூறினார்கள். ஆனால் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக பாதிக்கப்பட்டவர்களை மகாபலிபுரத்துக்கு அழைத்து ஆறுதல் சொல்லும் நடவடிக்கையில் இறங்கினார் தவெக தலைவர். இப்படி ஆறுதல் சொல்வது உலக வரலாற்றிலேயே இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மகாபலிபுரத்தில் நிகழ்வு: இந்த முடிவு எடுக்கப்பட்டதை அடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தனி பேருந்து பிடித்து அவர்களை அழைத்துவந்தார்கள். நேற்று இந்த நிகழ்வு நடந்தது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனி அறை புக் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அங்கு வந்த விஜய் அனைவரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மாதாமாதம் 5,000 ரூபாய் வழங்குவேன் என்றும், உங்களுக்கு நான் இருக்கிறேன் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
காலில் விழுந்த விஜய்: அதுமட்டுமின்றி, குழந்தைகளை அழைத்துவர வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் ஏன் அழைத்துவந்தீர்கள்; கடுமையான மன உளைச்சலில் இருக்கிறேன் என கலங்கியபடி பேசி காலில் விழுந்ததாகவும் ஒரு தகவல் ஓடியது. இதற்கிடையே தவெக சார்பில் தனக்கு அனுப்பப்பட்ட 20 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், 'விஜய்தான் நேரில் வர வேண்டும்' என சொல்லி திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
பைத்தியக்காரர் மாதிரி இருக்கார்: இந்நிலையில் நேற்றைய ஆறுதல் பெறும் நிகழ்வில் கலந்துகொண்ட மகனை இழந்த தந்தை ஒருவர் தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், "உங்களை இங்கே வரவழைத்தது என்னுடைய தவறு என்று சொல்லி காலில் விழுந்தார். ரொம்ப கஷ்டமா போச்சு. அவர் ரொம்பவே இளைத்துவிட்டார். பைத்தியக்காரர் மாதிரி இருந்தார். எங்களுக்கு அவரை இங்கிருந்து சென்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.மனிதாபிமானம் அடிப்படையில்தான் சென்றோம். கோடி கோடியா பணம் கொடுத்தாலும் இறந்துபோன பிள்ளை வருமா? என்றார்.


Click it and Unblock the Notifications











