நெற்றியில் சந்தனம், குங்குமத்துடன் விஜய்..விமானத்தில் பறந்தபடி விதவிதமான போஸ்!

சென்னை : நடிகர் விஜய்யுடன் பிரபல நடிகை எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் டிராண்டாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது வாரிசு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

வம்சி இயக்கம் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், யோகி பாபு, நடிகர் ஷாம், குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

வாரிசு

வாரிசு

ரொமான்ஸ், காமெடி, ஆக்‌ஷன் மற்றும் செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவையாக வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது வாரிசு திரைப்படத்தில் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய் சம்பந்தப்பட்ட முக்கிய பகுதிகள் படமாக்கப்பட இருக்கின்றன.

அடுத்தடுத்து லீக்கான போட்டோஸ்

அடுத்தடுத்து லீக்கான போட்டோஸ்

வாரிசு திரைப்படத்திலிருந்து மருத்துவமனை காட்சி, பாடல் காட்சி என அடுத்தடுத்து வெளியாகி படக்குழுவை திக்கு முக்காட வைத்துவிட்டனர். விஜய்யின் படப்பிடிப்பில் இருந்து படங்கள் கசிவது இது முதல் முறையல்ல. படப்பிடிப்பு தளங்களில் பல கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், வாரிசு படத்தின் படங்கள் தொடர்ந்து கசிந்து வருகின்றன. இதனால், படக்குழு படப்பிடிப்பு தளத்தில் செல்போனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு ரிலீஸ்

பொங்கலுக்கு ரிலீஸ்

வாரிசு' படத்தின் மொத்த படப்பிடிப்பும் செப்டம்பரில் முடிவடையும் என்றும், படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடிந்து வருவதால், நடிகர் விஜய், சென்னையிலிருந்து அடிக்கடி ஐதராபாத் சென்று வருகிறார். இன்று சென்னையிலிருந்து ஐதராபாத் சென்றார். அதே விமானத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் பயணம் செய்தார்.

 சந்தனம், குங்குமத்துடன் விஜய்..

சந்தனம், குங்குமத்துடன் விஜய்..

இந்நிலையில் நடிகை வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யுட எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, ஐதரபாத்திற்கு செல்ல இதற்கு முன் இது போன்ற பயணத்தை அனுபவித்ததில்லை. இன்றைய பயணத்தில் தன் அருகில் நடிகர் விஜய் இருந்தார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். அந்த புகைப்படத்தில் நடிகர் விஜய் நெற்றியில் சந்தனம் மற்றும் குங்குமம் வைத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X