»   »  பார்வையை இழந்து வரும் கேரள ரசிகருக்கு... நேரில் ஆறுதல் கூறிய விஜய்!

பார்வையை இழந்து வரும் கேரள ரசிகருக்கு... நேரில் ஆறுதல் கூறிய விஜய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: வேகமாக கண் பார்வையை இழந்து வரும் கேரள ரசிகரான ஜிதினை சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார் விஜய்.

தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய்க்கு கேரள மாநிலத்திலும் அதிகளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். இதனால் இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அங்கும் நல்ல வசூலை ஈட்டி வருகின்றன.

விஜய்யின் ரசிகரும், விஜய் ரசிகர் மன்றத்தின்(கொல்லம்) உறுப்பினர்களில் ஒருவருமான ஜிதின்(20) என்னும் இளைஞருக்கு, என்னவென்று தெரியாத நோயின் தாக்கத்தால் பார்க்கும் திறன் வேகமாகக் குறைய ஆரம்பித்தது.

ஒரு கண் பார்வையை இழந்துவிட்ட ஜிதினுக்கு மற்றொரு கண்ணின் பார்வையும் குறைந்து கொண்டே வருகிறது. தனது பார்வை முற்றிலும் போவதற்குள் விஜய்யை ஒருமுறையாவது நேரில் சந்தித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து கேரள ரசிகர் மன்றத்தினர் இது தொடர்பான முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். சமீபத்தில் இதுகுறித்துத் தெரிந்து கொண்ட விஜய், ஜிதினை சென்னை வரவழைத்து அவருடன் நீண்ட நேரம் செலவிட்டு இருக்கிறார்.

மேலும் ஜிதினுக்கு ஆகும் மருத்துவ செலவுகளை தான் ஏற்பதாகவும் உறுதி அளித்திருக்கிறார். ஆனால் ஜிதினுக்கு இனி பார்வை மீள வாய்ப்பில்லை என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
Kerala Vijay fan Jithin(20) Lost his Eyes Vision. Recently Vijay know this Information and he met Jithin directly in Chennai.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil