»   »  'கோலிசோடா 2' படத்தில் விஜய் மில்டனின் தம்பி! - சினிமாவுக்கு இதுக்குதான் வந்தாராம்

'கோலிசோடா 2' படத்தில் விஜய் மில்டனின் தம்பி! - சினிமாவுக்கு இதுக்குதான் வந்தாராம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'கோலிசோடா' படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய்மில்டன் இயக்கிய படம் '10 எண்றதுக்குள்ள'. இப்படம் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து 'கடுகு' என்ற படத்தை இயக்கினார்.

ராஜகுமாரன், பரத் ஆகியோர் நடித்த 'கடுகு' படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்து. இந்தப் படத்தில் விஜய் மில்டனின் தம்பி பரத் சீனியும் அனிருத் என்ற ரோலில் நடித்திருந்தார். தற்போது 'கோலிசோடா 2' படத்தை இயக்கி வருகிறார் விஜய்மில்டன்.

Vijay Milton's brother in Golisoda 2

'கோலிசோடா 2' படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இன்னொரு முக்கியமான வேடத்தில் விஜய்மில்டனின் தம்பி பரத் சீனி நடிக்கிறார். 'கடுகு' படத்தில் நடித்ததை விட இவருக்கு இந்தப் படத்தில் பெரிய வேடமாம். அதோடு சுபிக்ஷா இவருக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.

பரத்சீனி, டைரக்டர் லிங்குசாமி படங்களில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்திருக்கிறார். அதனால் டைரக்டராக வேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாம். 'கடுகு' படத்தில் எதிர்பாராதவிதமாக நடிகரானவர் தற்போது மீண்டும் 'கோலிசோடா 2'-விலும் நடிக்கிறார்.

இந்த படம் என்னை இன்னும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கொண்டுசெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது எனக் கூறியிருக்கிறார் பரத் சீனி.

English summary
Samuthirakani plays a prominent role in 'Golisoda 2' directed by Vijay Milton. In another important role, the younger brother of vijay milton, Bharath Seeni plays the lead. Bharath Seeni, who is an unexpected performer in 'Kadugu', is currently acting in 'Golisoda 2'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil