»   »  விஜய்க்கு அம்மாவாகணும்… இது விஜய் அம்மாவின் ஆசை!

விஜய்க்கு அம்மாவாகணும்… இது விஜய் அம்மாவின் ஆசை!

Posted By: Rajiv
Subscribe to Oneindia Tamil

இளைய தளபதி விஜய்க்கு அவரது அம்மா என்றால் உயிர். ஷோபா கச்சேரியில் பாடிக் கொண்டிருந்த காலங்களில் எந்த முக்கியமான வேலையாக இருந்தாலும் அந்த ஷெட்யூலை மாற்றிவிட்டு அம்மாவின் கச்சேரியில் ஆஜராகி நிகழ்ச்சி முடியும்வரை ரசித்துவிட்டு திரும்புவார். அப்படி ஒரு அம்மாப்பிள்ளைதான் விஜய்.

விஜய் அம்மா ஷோபா சந்திரசேகருக்கு ஒரு ஆசை இருக்கிறது.

Vijay mother Shobha's wish

அது விஜய்க்கு அம்மாவாக ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூட இதை வெளிப்படுத்தி இருந்தார்.

இதுவரை தன்னிடம் கூட சொல்லாத அம்மா இதைச் சொல்ல கேள்விபட்ட விஜய்க்கு சர்ப்ரைஸ்.

அம்மாவிடம் சீக்கிரமே நடிக்கலாம் என்று சொல்லியிருக்கிறாராம். நல்ல வெயிட்டான ரோலாகத்தான் தன் அம்மா நடிக்க வேண்டும் என்பது விஜய்யின் விருப்பமாம்.

ஷோபாவும் விஜய்யும் அம்மா மகனாக ஒரு நகைக்கடை விளம்பரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து சினிமாவிலும் சேர்ந்து நடிக்கப் போகின்றனர்.

English summary
Vijay's mother Shobha wished to play as mother for his son in a movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil