»   »  அமெரிக்காவுக்கு பறக்கிறது விஜய் - முருகதாஸ் கூட்டணி!

அமெரிக்காவுக்கு பறக்கிறது விஜய் - முருகதாஸ் கூட்டணி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிக் பாஸ் புகழ் நடிகையை வைத்து படம் எடுக்கும் முருகதாஸ்: அப்போ விஜய் 62 கதி?- வீடியோ

விஜய், முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த 'துப்பாக்கி' அதிரடி த்ரில்லர். கத்தி விவசாயிகளின் பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

இப்போது இருவரும் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படத்தின் கதையும் விவசாயம் தொடர்பானதுதானாம்.

Vijay - Murugadass and crew to fly US

கடந்த மாதம் இ ஸி ஆரில் பாடல்காட்சியோடு படப்பிடிப்பு தொடங்கியது. அதன் பிறகு இருபதுநாள் படப்பிடிப்புக்காக மொத்த டீமும் கல்கத்தா போனார்கள். பத்து நாள்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்த முடியாத அளவுக்கு சிக்கல் வந்துவிட்டது. அப்படியே சென்னைக்கு யூ டேர்ன்.க ல்கத்தாவில் எடுக்க முடியாத காட்சிகளை, தற்போது காஞ்சிபுரம் போகும் வழியிலுள்ள ஒரு கல்லூரியில் செட் போட்டு படமாக்கிக் கொண்டிருக்கிறார் முருகதாஸ்.

கதையின் முக்கியமான காட்சிகள் அமெரிக்காவில் நடக்கிறதாம். அதனால் மொத்த டீமும் அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு போகவிருக்கிறார்கள். அங்கே இருபதுநாள் படப்பிடிப்பு நடத்த திட்டம் வைத்திருக்கிறார்கள். பொதுவாக வெளிநாட்டில் படப்பிடிப்பு என்றால் பெரிய அளவில் கூட்டம் சேர்க்க மாட்டார்கள். பெரிய பட்ஜெட் படங்களுக்கு அந்த விதிவிலக்கு கிடையாது. இத்தனைக்கும் இது 'சன் பிக்சர்ஸ்' தயாரிப்பு. சொல்லவா வேண்டும்! ஆனாலும் ஆட்களின் எண்ணிக்கையைக் குறைக்கச் சொல்லிவிட்டாராம். காரணம்? அமெரிக்காவில் நடக்கும் காட்சிகள்தான் இந்தக் கதைக்கு முக்கியமான கரு. படம் திரைக்கு வரும்வரை அது வெளியில் போய்விடக்கூடாது என்பதில் ரொம்பவே கவனமாக இருக்கிறார் இயக்குநர் முருகதாஸ்.

English summary
Vijay - Murugadass and crew have to fly US for their m,ovie shoot

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil