»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

ரசிகர்கள் அடக்கத்துடன் செயல்படாவிட்டால் மன்றங்களைக் கலைத்து விடுவேன் என நடிகர் விஜய்எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பான ரசிகர்களே, 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை நாளிதழில் என் நற்பணிமன்ற செயலாளர் நண்பர் சுரேஷ் கொலை செய்யப்பட்டதை அறிந்து என் இதயமே வெடித்து விட்டது.

என் குடும்பத்தில் ஒருவனை இழந்தது போன்ற துயரம் என மனதை வருத்தியது. என் தம்பி இறந்து விட்டதாகஎண்ணி அழுது கொண்டிருக்கிறேன்.

மகனை இழந்து தவிக்கும் அந்த பெற்றோரை எண்ணிப் பார்க்கிறேன். அவர்களுக்கு எப்படி ஆறுதல்சொல்வதென்றே தெரியாமல் தவிக்கிறேன். அந்த கலங்கிய நெஞ்சங்களுக்கு கடவுள்தான் ஆறுதலாக இருக்கவேண்டும்.

இந்த நேரத்தில் என் ரசிகர் மன்ற ரசிகர்களிடம் நான் கேட்பதெல்லாம், கொலை செய்யுமளவுக்குகொடுமையானவர்களா என் ரசிகர்கள்? உயிர் அவர்களுக்கு அவ்வளவு சாதாரணமானதா? இப்படி கொலை வெறிபிடித்தவர்கள் எனக்கு ரசிகர்களாக் இருக்க வேண்டாம்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது ரசிகர் மன்றங்களே தேவையில்லை என்று தோன்றுகிறது. மன்றத்தில்இருக்கிறார்களோ இல்லையோ என்னை விரும்பும் அத்தனை பேரையும் நான் விரும்புகிறேன். என்னைநேசிக்கும் அத்தனை பேரையும் நானும் நேசிக்கிறேன்.

என் ரசிகர்கள் அன்பானவர்களாக இருக்க வேண்டும். அமைதியானவர்களாக இருக்க வேண்டும். அடுத்தவர்உயிரை தன் உயிராக நினைக்கும் பாசம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இனி இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் எந்த மாவட்டத்தில் நடந்தாலும் அங்குள்ள ரசிகர் மன்றங்கள் கலைக்கப்படும்,என்றும் கண்டிப்புடன் சொல்லிக் கொள்கிறேன்.

இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil