»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நிதியுதவி வழங்கிய விஜயிடம் கொல்லப்பட்ட ரசிகரின் தாயும், தந்தையும் கதறியழுதபோது..
தனது ரசிகர்கள் மோதலில் கொலை செய்யப்பட்ட ரசிகரின் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நேரில் சென்றுஆறுதல் கூறினார். ரூ. 50,000 நிதியுதவியும் வழங்கினார்.

தீபாவளியன்று வெளியான விஜய்யின் திருமலை படத்துக்கு காரைக்குடி தியேட்டர் ஒன்றில் போஸ்டர் ஒட்டுவதில்ரசிகர்களுக்கு இடையே மோதல் வெடித்தது.

ஒரு தரப்பு ரசிகர்கள் தங்களது ஜாதிப் பெயரையும் சேர்த்து போஸ்டர்அடிக்க, அதை இன்னொரு தரப்பினர் எதிர்த்துள்ளனர்.

இதில் நடந்த மோதலில் சுரேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் விஜய் காரைக்குடிக்கு வந்தார். சுரேஷின் வீட்டுக்குச் சென்ற விஜய்யை கட்டிப்பிடித்து அவரது தந்தைஆறுமுகம், தாயார் லட்சுமி ஆகியோர் கதறியழுதனர்.

கணகலங்கிய விஜய் அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு சுரேஷின் படத்துக்கு மாலை அணிவித்தார். பின்னர் ரூ.50,000 வழங்கிய விஜய், சுரஷைப் போல நானும் உங்கள் மகன்தான். உங்களுக்கு எல்லா உதவிகளும் செய்வேன்என்று உறுதியளித்த விஜய், பின்னர் அங்கிருந்து கிளம்பினார்.

விஜய் வந்துள்ளதை அறிந்து அப் பகுதியில் ஏராளமானோர் கூடினர். ஆனால், வழக்கமான தன் உற்சாகத்தைஇழந்திருந்த விஜய் அமைதியாய் அவர்களை நோக்கி கும்பிட்டுவிட்டுச் சென்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil