»   »  இந்தியாவின் 'காஸ்ட்லி' பட்ஜெட் படத்தில் நடிக்கும் விஜய்?

இந்தியாவின் 'காஸ்ட்லி' பட்ஜெட் படத்தில் நடிக்கும் விஜய்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுந்தர்.சியின் சரித்திரப் படத்தில் விஜய் நடிக்கப் போகிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெறியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தியாவின் காஸ்ட்லி பட்ஜெட் படமாக உருவெடுக்கும் சுந்தர்,சி படத்தில் விஜய் நடிக்கப் போவதாக தகவல்கள் அடிபடுகின்றன.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்

தயாரிப்பு, விநியோகம் இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டி வரும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின், 100 வது படத்தை இயக்கும் வாய்ப்பு சுந்தர்.சிக்கு கிடைத்துள்ளது. பாகுபலி, எந்திரன் படங்களின் பட்ஜெட்டை மிஞ்சும் வகையில் இப்படத்திற்கான பட்ஜெட் இருக்கும் என்று கூறுகின்றனர். சரித்திரக் கதையைத் தழுவி இப்படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

சூர்யா

சூர்யா

இப்படத்தின் நாயகனாக சூர்யா நடிக்கப் போகிறார் என செய்திகள் வெளியாகின. ஆனால் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் வரை காத்திருக்குமாறு கூறிய சூர்யா அடுத்ததாக, பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கப் போவதை உறுதி செய்திருக்கிறார்.

விஜய்

விஜய்

இந்நிலையில் விஜய் இப்படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தெறி படத்தைத் தொடர்ந்து விஜய் 60 படத்தில் விஜய் நடித்து வருகிறார். பரதன் படத்திற்குப் பின் விஜய் இதில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.மேலும் இப்படத்தில் விஜய் நடிக்கப் போவதை ரகசியமாக வைத்திருக்க தயாரிப்பாளர்கள் விரும்புகிறார்களாம்.

2 வருடங்கள்

2 வருடங்கள்

சரித்திரப் படமென்பதால், இப்படத்திற்கு 2 வருடங்கள் வரை தேவைப்படும் என்று இயக்குநர் சுந்தர்.சி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். இதனால் தான் சூர்யா இப்படத்திலிருந்து பின்வாங்கி விட்டார் என்று கூறுகின்றனர். கடந்த வருடம் விஜய் நடிப்பில் வெளியான புலி பாக்ஸ் ஆபீஸில் எடுபடவில்லை என்பதால், மீண்டும் ஒரு சரித்திரப் படத்தில் விஜய் நடிப்பது சந்தேகம்தான் எனவும் தகவல்கள் அடிபடுகின்றன.

விஜய், சுந்தர்.சி இயக்கத்தில் நடிப்பாரா? அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்வரை நாம் காத்திருக்கலாம்.

English summary
Sources Said Vijay Next Team Up with Sundar.c for a Costliest Budget Film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil