»   »  மனோராமா உடலுக்கு அஞ்சலி செலுத்திய விஜய்

மனோராமா உடலுக்கு அஞ்சலி செலுத்திய விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மரணம் அடைந்த மனோரமா ஆச்சியின் உடலுக்கு இளையதளபதி விஜய் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

5 தலைமுறை நடிகர், நடிகைகளுடன் நடித்த மனோரமா சனிக்கிழமை இரவு 11 மணிக்கு காலமானார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு காலை முதல் பொது மக்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Vijay pays tribute to Manorama achi

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை மனோரமாவின் வீட்டிற்கு வந்து அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் இளைய தளபதி விஜய் ஆச்சியின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Vijay pays tribute to Manorama achi

மேலும் அவர் மனோரமாவின் இழப்பால் வாடும் அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். விஜய் வழக்கத்திற்கு மாறாக தாடி வைத்திருந்தார். மனோரமாவின் இழப்பால் திரையுலகம் கவலையில் ஆழ்ந்துள்ளது.

Vijay pays tribute to Manorama achi

சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஆச்சிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Ilaya Thalapathy Vijay has paid his tribute to Manorama Achi at her residence in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil